இன்றைய குறள்

Tuesday, June 12, 2012

யூரோ 2012 - பிரான்ஸ் எதிர் இங்கிலாந்து (France vs England)

யூரோ 2012இல் நான்காம் பிரிவில் உள்ள இங்கிலாந்தும், பிரான்ஸ் அணியும் 11-ஜூன்-2012இல் மோதின.



இரண்டு அணி வீரர்களும் சமபலத்துடன் இருந்தாலும் இங்கிலாந்தின் நட்சத்திர வீரர்கள் ரூனி மற்றும் லாம்பார்ட் விளையாடாதது அவர்களுக்கு பின்னடைவு தான்.

இங்கிலாந்து அணி


ஆட்டம் துவங்கியதிலிருந்து பிரான்ஸ் அணியின் ஆதிக்கமே இருந்தது. இருந்தாலும் அவர்களின் தடுப்பு வீரர்கள் சிறப்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிராஸ் வீரர்கள் அவர்களின் அரனை முறித்து முன்னேற சற்று சிரம்மப்பட்டனர்.

பிரான்ஸ் வீரர் நஸ்ரி அடித்த பந்து இலக்கின் கம்பிக்கு மிக அருகில் வெளியே சென்றது.

ஆட்டத்தின் 14வது நிமிடத்தில், இங்கிலாந்தின் மிள்னருக்கு ஆஷ்யிலே யங் மூலம் அருமையான வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸின் காப்பாளர் பந்தை தடுக்க முன்னேறி வர, அவரிடம் பந்து சிக்காமல் இடது பக்கம் பந்தை எடுத்து சென்றார் மில்னர். இப்பொழுது இலக்கில் யாருமே இல்லை. ஆனால் இந்த வாய்ப்பினை மில்னர் தவரவிட்டுவிட்டார்.



பிரான்ஸின் இடது பக்க மேல் மூலைக்கு சற்று தள்ளி பிரான்ஸின் எவரா 29வது நிமிடத்தில் செய்த பிழையால் இங்கிலாந்துக்கு ஒரு பந்து கிடைத்தது. அதை அருமையான முறையில் எத்தினார் இங்கிலாந்து தலைவர் ஜெரார்டு. பிரான்ஸின் காப்பாளர் கட்டத்துக்குள் காற்றில் மிதந்து பறந்து வந்த பந்தை அருமையான முறையில் லெஸ்காட் தலையில் முட்டி இலக்கை நோக்கி அடித்தார். பிரான்ஸின் காப்பாளர் பிடிக்க தடுமாறி விட்டுவிட்டார். இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகித்தது.


இது முடிந்து 4வது நிமிடத்தில் அதே போல் பிரான்சுக்கு ஒரு பந்து கிடைத்தது. அதை நஸ்ரி உதைக்க, காப்பாளர் கட்டத்துக்குள் காற்றில் மிதந்து பறந்து வந்த பந்தை, டியாரா அருமையான முறையில் தலையில் முட்டி இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் அதை மிக மிக நேர்த்தியான முறையில் தடுத்தார் இங்கிலாந்து காப்பாளர் ஹார்ட்.


ஆட்டத்தின் 39வது நிமிடத்தில், பிரான்சின் எவரா பந்தை காப்பாளர் கட்டத்துக்குள் இருக்கும் ரிபெரியிடம் கொடுக்க, அவர் கட்டத்துக்கு வெளியே நின்ற நஸ்ரியிடம் கொடுக்க மிக மிக சிறப்பான முறையில் எத்தினார். இங்கிலாந்து காப்பாளர் ஹார்ட் பந்தை பிடிக்க தன்னால் இயன்ற வரையில் முயன்றார் ஆனால் அவரால் முடியவில்லை. பந்து இலக்கினுள் சென்றுவிட்டது. இதை மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் மீண்டும் சமநிலைக்கு வந்தது.


ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் நஸ்ரியும் பென்சமாவும் நேர்த்தியான முறையில் பந்தை கடத்தி சென்று, பென்சமா இலக்கை நோக்கி உதைத்தார். சற்று கடினமான கோணத்தில் இருந்து எத்தினார் என்றே சொல்லவேண்டும்; ஆனால் அதை அருமையான முறையில் இங்கிலாந்தின் காப்பாளர் தடுத்தார்.

ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் இங்கிலாந்தின் காப்பாளர் கட்டத்துக்குள் மேலே இருந்த பந்தை பிரான்சின் ரிபேறி தலையால் முட்டி கொடுக்க, கபாயே கட்டத்துக்கு வெளியே நின்று அதி வேகத்தில் உதைக்க, பந்து இலக்கை நோக்கி வந்தது. நிச்சயம் காப்பாளரை கடந்து உள்ளே சென்று இருக்கும். இங்கிலாந்தின் வேல்பக் சரியான நேரத்தில் காலால் உதைத்து வெளியே தள்ளினார்.



ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் (93வது நிமிடத்தில்) பிரான்சின் பென்சமா காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து அடித்த பந்தை கீழே வீழ்ந்து சாமார்த்தியமாக தடுத்தார் இங்கிலாந்து காப்பாளர். இதையடுத்து ஆட்டம் என்ற நிலையில் சமநிலையில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் பிரான்சின் ஆதிக்கமே இருந்தது என்று சொல்ல வேண்டும். இங்கிலாந்தின் காப்பாளார் ஹார்ட்டுக்கு நிறைய வேலை இருந்தது. அருமையான முறையில் நிறைய தடுத்தார். ஆட்ட நாயகன் பிரான்சின் நஸ்ரி என்று சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment

பழமொழி