இன்றைய குறள்

Thursday, June 14, 2012

யூரோ 2012 - டென்மார்க் எதிர் போர்ச்சுகல் (Euro 2012 Denmark vs Portugal)


இரண்டாம் பிரிவில் உள்ள, முதல் சுற்று போட்டியில் நெதர்லாந்தை வென்ற டென்மார்க் அணியும், ஜெர்மனியிடம் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியும் மோதும் சுற்றுப்போட்டி.

உலக கால்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் நட்ச்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.

ஆட்டம் தொடங்கி 7 நிமிடத்தில் டென்மார்க் அணிக்கு 4 முறை போர்ச்சுகளின் காப்பாளரின் இடது வலது புறத்தில் இருந்து பந்தை ஏத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் 10 நிமிடம் வரை டென்மார்க்கின் ஆதிக்கமே இருந்தது.

ஆட்டத்தின் 23வது நிமிடத்தில் போர்ச்சுகளுக்கு ஒரு வாய்ப்பு corner kick மூலம் கிடைத்தது. ஆனால் டென்மார்க்கின் தடுப்புக்கள வீரர்கள் பந்தை வெளிய அடித்துவிட்டனர்..

ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் போர்ச்சுகளுக்கு ஒரு வாய்ப்பு corner kick மூலம் கிடைத்தது. அருமையாக எத்திய பந்தை பெப்பே தலையால் முட்டி இலக்கினுள் அடித்து போர்ச்சுகல் அணியை 1-0 என்று முன்னிலை வகிக்க காரணமாக இருந்தார்.



ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் போர்ச்சுகளை சேர்ந்த நாணி வலது புறத்தில் இருந்து பந்தை cross செய்ய போஸ்டிகா அதை இலக்கினுள் சரியாக அடித்து அணிக்கு மேலும் ஒரு இலக்கு சேர்த்தார். இதன் மூலம் 2-0 என்று போர்ச்சுகல் முன்னிலை வகித்தது.



ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் டென்மார்க்கின் பேன்ட்னர் தலையால் முட்டி டென்மார்க் அணிக்கு ஒரு இலக்கை தேடிக்கொடுத்தார். ஆட்டம் 2-1 என்று போர்ச்சுகல் முன்னிலை வகித்தது. இதோடு முதல் பாதி முடிவடைந்தது.



இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில் ரொனால்டோவிடம் பந்து கிடைக்க புயல் வேகத்தில் சென்றார். அவரும் டென்மார்க்கின் காப்பாளர் மட்டுமே இருக்க, நேராக காப்பாளரின் கைகளுக்கு அடித்தார். ரொனால்டோ இதை போன்ற வாய்ப்பையும் தவற விடுவாரோ என்பது போல் இருந்தது.

மீண்டும் ஒரு வாய்ப்பு ரோனால்டோவுக்கு, இதை போல் ஒரு வாய்ப்பு மீண்டும் அமையுமா என்ற கேள்வி நம்முள் கேட்கவைக்கும்.

ஆட்டம் முடிய 10 நிமிடங்கள் மீதம் இருக்கும் நிலையில் டென்மார்க் அருமையான ஒரு இலக்கை அடித்தது. மீண்டும் பேன்ட்னரே அடித்தார். இதையும் தலையால் முட்டி தான் அடித்தார். மீண்டும் ஆட்டம் சமநிலைக்கு 2-2 என்ற கணக்கில் வந்தது.



ஆட்டத்தின் 86நிமிடத்தில் மாற்று ஆட்டக்காராக வந்த வரேலா காற்றில் மிதந்து வந்த பந்தை அதிவேகமாக உதைத்து வலையினுள் தஞ்சம் புக வைத்தார். இதன் மூலன் 3-2 என்று முன்னிலை வகித்த போர்ச்சுகளின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியானது.



கடைசி சில வினாடிகள் இருந்த நிலையில் தனக்கு கிடைத்த சிறப்பான ஒரு வாய்ப்பை டென்மார்க்கின் ஷோன்னே தவரவிட்டுவிட்டார். இதன் பிறகு போட்டி முடிவடைந்தது. போர்ச்சுகல் 3-2 என்ற கணக்கில் ஆட்டத்தை வேண்டும் 3 புள்ளிகள் பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக போர்ச்சுகல் யூரோ தொடர் போட்டியில் 3 புள்ளிகள் எடுத்து தன் நிலையை தக்க வைத்துக்கொண்டது.

No comments:

Post a Comment

பழமொழி