இன்றைய குறள்

Sunday, June 24, 2012

யூரோ 2012 மூன்றாம் காலிறுதி போட்டி ஸ்பெயின் எதிராக பிரான்ஸ் (Spain Vs France)நடப்பு உலக கோப்பை 2010 மற்றும் யூரோ 2008இல் வாகையர் பட்டம் சூடிய ஸ்பெயின் அணியும், 1998இல் உலக கோப்பையும் 2000இல் யூரோ கோப்பையில் வாகையர் பட்டம் சூடிய பிரான்ஸ் அணியும் மோதும் யூரோ 2012இல் மூன்றாது காலிறுதி போட்டி.இரண்டு அணியிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் யூரோ 2012இல் காலிறுதி போட்டிகளில் இதுவே சிறந்த போட்டியாக இருக்கும்.இதில் வெற்றி பெரும் அணி முதல் காலிறுதியில் வெற்றி பெற்ற போர்ச்சுகல் அணியோடு அரையிறுதியில் மோதும்.ஆட்டம் துவங்கிய முதல் 5 நிமிடங்களில் பந்து இரண்டு பக்கமும் மாறி மாறி சென்றபோதிலும் யாரும் இலக்கினுள் பந்தை அடிக்கவில்லை. ஒன்று தடுப்புகள வீரர்கள் பந்தை தடுத்திருப்பார்கள். அல்லது முன்னிலை வீரர்கள் தவறாக எதிர் அணியினரிடம் பந்தை வழங்கி இருப்பார்கள்.

முதல் 10 நிமிடத்தில் ஸ்பெயினின் கட்டுப்பாடில் இருந்த பந்து பிரான்ஸ் வசம் வந்தது. இருந்த போதிலும் ஒரு முறை கூட இரண்டு அணியினரும் இலக்கை நோக்கி அடிக்கவில்லை.ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் இனியாஸ்டா இடது புறத்தில் முன்னே ஓடிய அர்பெல்லாவுக்கு பந்தை வழங்க அவர் பிரான்சின் தடுப்புகள வீரரை கடந்து பந்தை காப்பாளர் கட்டத்தினுள் வழங்க தயாராக இருந்த ஜாபி ஆலோன்ஸோ தடை எதுவும் இல்லாமல் தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார் இதன் மூலம் ஸ்பெயின் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.அடுத்த நிமிடமே மேலும் ஒரு வாய்ப்பு ஸ்பெயினுக்கு கிடைத்தது ஆனால் அது இலக்கிற்கு வெளியே அடிக்கப்பட்டது.

ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயினின் வீரர்கள் பந்தை ஒருவருக்கொருவர் வழங்கியபடி வேகமாக முன்னேறினர். காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து பாப்ரிகாஸ் கட்டத்தினுள் முன்னேறிய இனியாஸ்டாவிடம் வழங்க, அவர் இலக்கினுள் அடிக்க முயன்றார். ஆனால் பிரான்சின் தடுப்புகள வீரர் தடுத்து அது வெளியாகியது. இதன் மூலன் ஸ்பெயினுக்கு corner-kick கிடைத்தது ஆனால் அதை தலையால் முட்டி வெளியே அடித்தனர்.

முதல் பாதி துவங்கியது போலவே இரண்டாம் பாதில் முதல் 10 நிமிடங்கள் இருந்தது.

69வது நிமிடத்தில் அருமையான பந்து டோரேச்சுக்கு வஹ்ழப்பட்டது. ஆனால் பிரான்சின் தடுப்புகள வீரர் வெளியே அடித்தார். இதன் மூலம் ஒரு ஸ்பெயினுக்கு கிடைத்த வாய்ப்பு தகர்க்கப்பட்டது.

அடுத்த நிமிடத்தில் ரிபேரி இடது புறத்தில் இருந்து தடுப்புகள வீரர்களை கடந்தது பந்தை உதைக்க, அருமையான முறையில் காசியாஸ் தடுத்தார். இது கொஞ்சம் அபாயமானது என்றும் கூறலாம்.ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள். தங்கள் அணியை இந்த தொடரில் தக்க வைக்க பிரான்ஸ் அணியினர் முயற்சி செய்து வந்தனர். ஆனால் அவர்களால் இலக்கை நெருங்க முடியவில்லை. இந்த தொடரில் ஸ்பெயின் அரையிறுதிக்குள் நுழைந்தால் கடந்த 20 ஆண்டுகளில் நடப்பு யூரோ வாகையர் பட்டம் சூடிய அணி அரையிறுதிக்கு செல்லும் முதல் நாடாக திகழும். இதற்கு முன் நெதர்லாந்து அணி இருந்தது.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்துக்கு இடது பக்கத்திலிருந்து உள்ளே நுழைய முயன்றார். அவர் உதைத்த பந்தை தடுத்தனர் ஸ்பெயின் தடுப்புகள வீரர்கள். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்கு corner-kick கிடைக்க அதை நஸ்ரி காப்பாளர் கட்டத்துக்கு அடிக்க தலையால் முட்டி அதை இலக்கினுல் நுழைக்க முயற்சி செய்து தொளியானது.

ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பெட்ரோ பிரான்ஸ் காப்பாளர் கட்டத்துக்குள் நுழைய அவரை இடித்து கீழே தள்ளிவிட்டார். அதற்கு தண்டமாக penalty-kick ஸ்பெயினுக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. ஜாபி ஆலோன்சோ அதை பயன்படுத்தி இலக்கினுள் அடித்து ஸ்பெயினின் அரையிறுதி நுழைவை உறுதி செய்தார்.

இத்தோடு ஆட்டம் முடிவடைந்தது. ஸ்பெயின் 2-0 என்ற இலக்கு கணக்கில் பிரான்சை தோற்கடித்து அரையிருதியினுள் நுழைந்தது

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.