இன்றைய குறள்

Saturday, June 23, 2012

யூரோ 2012 இரண்டாம் காலிறுதி போட்டி ஜெர்மனி எதிராக கிரிஸ் (germany Vs Greece)



இரண்டாம் பிரிவில் முதல் இடத்தை பிடித்த ஜெர்மனி அணியும் முதல் பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்த கிரிஸ் அணியும் மோதி கொள்ளும் காலிறுதி போட்டி. இது யூரோ 2012இல் நடை பெறும் இரண்டாம் காலிறுதி போட்டி. இதில் தகுதி சுற்று ஆட்டத்தில் விளையாடிய மூன்று போட்டிகளையும் வெற்றி கொண்டு மேலும் இத்தொடரில் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக திகழும் ஜெர்மனி அணி மிக மிக பலமாக கருத்தப்படுகிறது. இந்த ஆட்டம் நடக்கும் பொழுது எனக்கு இரவு வேலை இருப்பதால் முழு ஆட்டத்தை பற்றி கூற இயலாது. இந்த ஆட்டத்தின் சிறப்பு அம்சங்களை மட்டுமே இங்கு பதித்துள்ளேன்.

ஆட்டத்தின் முதல் 5 நிமிடத்தில் ஜெர்மனி அணியினர் 3 இலக்குகள் அடித்திருக்கலாம். ஓஸில் குலோசாவுக்கு பந்தை அடிக்க அவர் off-sideஇடத்தில் இருந்தார். அடுத்து ஒரு அருமையான பந்து ரேயுஸ் குலோசாவுக்கு வழங்க அவர் தடுக்கி விழுந்து அதை தவரவிட்டுவிட்டார். மேலும் ஸ்ருக்கள் மற்றும் கெத்திரா சேர்ந்து ஒரு வாய்ப்பு வீனடிக்கபட்டது. அடுத்து கிரிஸின் ஒரு முயற்சி அது தடுக்கப்பட்டது.
ஆட்டத்தின் 23-25 நிமிடங்களில் ஜெர்மனியில் அதிரடி ஆட்டத்தில் கிரிஸ் அணியின் காப்பாளருக்கு நெருக்கடி அதிகமாக இருந்தது. ஓஸில் அடித்த பந்தை தடுத்து வெளியே தள்ளினார். அதன் மூலம் கிடைத்த corner-kickஇல் அடுத்து அடித்த பந்தையும் வெளியே தள்ளினார். பிறகு ரெயுஸ் அடித்த பந்து வெளியே சென்றது. பிறகு ஷோருல் தடுப்பு வீரர்களை தவிர்த்து குலோசாவிற்கு வழங்கிய பந்து தவறவிட்டது போன்ற சம்பவங்கள் நடந்தேறியது. 27வது நிமிடத்தில் கிரிஸ் அணிக்கு ஒரு அருமையான வாய்ப்பு, ஆனால் ஜெர்மனியின் காப்பாளர் நேயுர் வெளியே ஓடி வந்து பந்தை அவருக்கு இடது பக்ககோட்டிற்கு வெளியே அடித்தார். ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஜெர்மனியின் கெத்திரா அடித்த பந்தை சிறப்பாக தடுத்தார் கிரிஸின் காப்பாளர். இந்நேரத்தில் கிரிஸின் அத்தனை வீரர்களும் தடுப்பாட்டம் ஆடினர்.




ஜெர்மனி தலைவர் லாம் அடித்த இலக்கு (கோல் ஜெர்மனி முன்னிலை 1-0)
கிரிஸின் காபாளார் கட்டத்திற்கு வெளியே இருந்து தனக்கு வழங்கிய பந்தை மிக மிக நேர்த்தியான முறையில் லாம் உதைக்க, காப்பாளர் சிபாகிஸ் தன்னுடைய இடது புறத்திற்கு தாவி பிடிக்க முயன்றார். ஆனால் அவரால் தடுக்க முடியாமல் அது இலக்கை அடைந்தது. முதல் பாதி முடியும் தருவாயில் ஸ்க்ருளே அடித்த பந்து கிரிஸின் இலக்கு கம்பிக்கு அருகில் சென்றது. அருமையான முயற்சி. இது உள்ளே புகுந்திருந்தால் நிச்சயம் பிடித்திருக்க முடியாது. முதல் பாதி ஆட்ட நேரத்தில் பந்து 70% ஜெர்மனியின் வசமே இருந்தது. அவர்களின் ஆதிக்கமே முதல் பாதியில் இருந்தது.

இரண்டாம் பாதி ஆட்டம் அருமையான நடத்தது என்று தான் சொல்லவேண்டும்.



ஆட்டத்தின் 55வது நிமிடடத்தில் கிரிஸின் சாம்ராஸ், சல்பிங்கிடிஸ் வழங்கிய பந்தை இலக்கினுள் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தார். ஆட்டம் 1-1 என்று நிலையில் வந்தது.

ஆட்டத்தில் 61வது நிமிடத்தில் போடேங் வழங்க பந்தை சிறப்பான முறையில் கெத்திரா உதைத்து இலக்காகினர். இதன் மூலம் ஜெர்மனி 2-1 என்ற கணக்கில் மீண்டும் முன்னிலை வகித்தது. இரண்டு நிமிடம் கழித்து கிரிஸின் கேகாஸ் உதைத்தார். ஆனால் அது இலக்கிற்கு சற்று உயரமாக வெளியே சென்றது. சமநிலை செய்யக்கூடிய ஒரு சந்தர்பம் என்று சொல்லவேண்டும்.



ஜெர்மனியின் குளோசா, ஓஸில் வழங்கிய பந்தை தலையால் முட்டி இலக்கினுள் அடித்தார். இதை சிபாகிஸ் தடுக்க முடியவில்லை. இதன் மூலம் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் குளோசா அருமையாக அடித்த பந்தை கிறிஸ காப்பாளர் சிறப்பாக தடுத்து வெளியேற்றினார்.

ஆட்டத்தின் 73வது நிமிடத்தின் தனக்கு கிடைத்த வாய்ப்பை குளோசா அடிக்க வெளியே வந்த காப்பாளர் அதை தடுத்தார், ஆனால் பின்னாலே விரட்டி வந்த ரேயுஸ் இலக்கினுல் அடித்து 4-1 என்ற கணக்கில் முன்னிலை வைகிக்க வைத்தார்.



ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் ஜெர்மனியின் காப்பாளர் கட்டத்தினுள் கிரிஸ் வீரர் அடித்த பந்து ஜெர்மனியின் தடுப்புகள வீரர் கையில் பட்டு penalty-kick வழங்கப்பட்டது. இதை சிறப்பாக பயன்படுத்தி சல்பிங்கிடிஸ் இலக்கினுள் அடித்து ஆட்டத்தை 4-2 என்ற கணக்கில் மாற்றினார். ஜெர்மனி வெற்றி பெற்றது.

ஆட்டம் முடிவடைந்தது. ஜெர்மனி இரண்டாவது அணியாக யூரோ 2012இல் அரையிறுதிக்கு நுழைந்தது. இந்த அணி 24-ஜூன்-2012இல் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியோடு அரையிறுதியில் விளையாடும்.

No comments:

Post a Comment

பழமொழி