இன்றைய குறள்

Friday, June 22, 2012

யூரோ 2012 முதல் காலிறுதி போட்டி செக் குடியரசுக்கு எதிராக போர்ச்சுகல்

முதல் காலிறுதி போட்டி பிரிவு 1றில் தகுதி சுற்று போட்டியில் முதல் இடத்தை பிடித்த செக் குடியரசு அணிக்கும் பிரிவு 2டில் இரண்டாம் இடத்தை பிடித்த போர்ச்சுகல் அணிக்கும் இடையே நடந்தது. இவ்விரண்டு அணிகளும் தகுதி சுற்று போட்டியில் முதல் போட்டியை தோற்றன என்பது குறிப்பிட தக்கது. செக் குடியரசு ரஷியாவிடமும், போர்ச்சுகல் ஜெர்மனி அணியிடமும் தோற்றன.



ஆட்டம் ஆரம்பித்து சில நிமிடங்களில் செக் குடியரசு அணியினர் பந்தை தங்கள் வசமே தக்க வைத்தனர். அவர்களுக்கு கிடைத்த corner-kickஐ சற்று தூரமாக அடித்துவிட்டனர். அங்கு அவர்கள் அணியினர் யாரும் இல்லை. அதற்கு பிறகு போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்தினுள் வலது புறத்தினில் இருந்து பந்தை வழங்க அதை இலக்கினுள் அடிக்க ஒருவரும் இல்லை. அதன் பிறகு பந்து போர்ச்சுகல் பக்கமும், செக்குடியரசு பக்கமும் மாறி மாறி சென்றதே தவிர சிறப்பாக ஒன்றும் நடக்கவில்லை. ரொனால்டோ அருமையான பந்தை இலக்கு நோக்கி அடிக்க அதை காப்பாளர் பீட்டர் செக் அருமையாக தடுத்தார்.

ஆட்டத்தில் 32வது நிமிடத்தில் செக் காப்பாளர் கட்டத்துக்குள் வந்த பந்தை அருமையான முறையில் படுத்து பின்னால் அடித்தார் ரொனால்டோ, அது இலக்கின் கம்பிக்கு சற்று வெளியே சென்றது. பிரமாதமான முயற்சி இது.

ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் free-kick மூமல் கிடைத்த பந்தை கம்பிக்கு வெளியே அடித்தார் ரொனால்டோ. பந்து வெளியேறியது.



முதல் பாதி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்க ரொனால்டோவின் முயற்சி கம்பியினுள் அடித்து வெளியாகியது. இத்தொடரில் 6வது முறையாக கம்பியில் அடித்த பந்து. இதை அவர் பீட்டர் செக்கின் வலது புறம் அடித்திருந்தால் (second post) நிச்சயம் இதில் வெற்றி கண்டு இருப்பார். இத்தோடு முதல் பாதி முடிந்தது. சற்று மந்தமாக சென்றிருந்த போதிலும் இருவரும் சமமாக விளையாடினர் என்றே சொல்லலாம்..

விருவிருப்பான் இரண்டாம் பாதி:-
தொடங்கிய சில வினாடிகளில் மேர்லிஸ் செக் காப்பாளரின் வலது புறத்தில் இருந்து பந்தை அழகாக கொடுக்க அதை தலையில் முட்டினார் அல்மேய்டா வெளியே அடித்துவிட்டார். இதை அவர் தலையால் முட்டும் பொழுது அவரிடம் எந்த செக் குடியரசு வீரர்களும் இல்லை. ஒரு அருமையான வாய்ப்பு தவரவிடபட்டது என்றே அர்த்தம்.

ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த பந்து செக் குடியரசின் இருவீரர்கள் கொண்ட சுவற்றில் அடித்தார். அது ஒருவரின் கையில் பட்டதால் மேலும் ஒரு free-kick கிடைத்தது. அதை அருமையான முறையில் ரொனால்டோ உதைக்க, உருண்டு சென்ற பந்தை காப்பாளர் செக் பிடிக்க தவறி காப்பாளர் கம்பியில் பட்டு வெளியானது. ரொனால்டோ அடித்த பந்து இந்த ஆட்டத்தில் 2வது முறையாகவும் இத்தொடரில் 7வது முறையாகமும் கம்பியில் அடித்தது. மீண்டும் மேறேளிசில் ஒரு அருமையான வாய்ப்பை ரொனால்டோ வழங்கினார். பந்தை தடுப்பு கள வீரர்களை தாண்டி போகுமாறு வழங்க பந்தை துரத்தி சென்ற ரொனால்டோ அதை இலக்கினுள் அடிக்காமல் மேலே அடித்தார்.

ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் நாணி அருமையாக பந்தை கடத்தி சென்று இலக்கினுள் அடித்தார் அதை காப்பாளர் செக் அருமையாக தடுத்தார். ஒரு நிமிடத்திற்கு பிறகு நாணி ஒரு பந்தை காப்பாளர் கட்டத்தினுள் கொடுக்க அதை இலக்கினுள் தலையால் முட்டி அடித்தார். ஆனால் அவர் off-sideஇல் நின்றிருந்ததால் அது செல்லாததாக அறிவிக்கப்பட்டது. பக்ககோடிற்கு வெளியே இருந்து நடுவர் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கின்னார். இப்பொழுது தான் பந்து செக் குடியரசு அணியினருக்கு கிடைத்தது. அவர்கள் பந்தை போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்துக்குள் அடிக்க இரண்டு செக் வீரர்கள் தயாராக இருந்தனர். ஆனால் போர்ச்சுகளின் தடுப்புகள வீரர்களின் முறியடித்தனர். மீண்டும் செக்கின் அணியின் பாரோஸ் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து இலக்கு நோக்கி அடிக்க, அது எங்கோ மேலே பறந்தது.

இதுவரை ஆட்டத்தில் போர்ச்சுகல் 11 முயற்சிகளும் செக் அணியினர் 2 தடவை தான் இலக்கு அடிக்க முயற்சி செய்து உள்ளனர்.

ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்துக்கு வெளியே இருந்து மௌண்டினோ அடித்த பந்து அருமையான இலக்கினுள் நுழைய முயல காப்பாளர் செக் நேர்த்தியாக வெளியே தள்ளினார். அப்பொழுது போர்ச்சுகளுக்கு கிடைத்த corner-kick செக்கின் தடுப்புகள வீரர்களால் வெளியே நிராகரிப்பட்டது. நாணி 69வது நிமிடத்தில் அருமையான முறையில் காப்பாளர் கட்டத்தினுள் இருக்கும் ரொனால்டோவுக்கு வழங்க, பந்தை சரியாக கணிக்காமால் வெளியே உதைத்தார் அவர். இந்த நேரம் பந்தை போர்ச்சுகலின வீரர்களே வசமாக்கினர். அவர்களின் ஆட்டமே மேலோன்கி இருந்தது. காப்பாளர் கட்டத்தினுள் ரொனால்டோ தடுப்பு வீரரை சமாளித்து மேர்லிசிடம் பந்தை வழங்க அவரும் இலக்கு வெளியே அடித்தார். காப்பாளர் கட்டத்துக்குள் ஒரு அருமையான வைப்பு நாணிக்கு கிடைத்தது. அவர் பந்தை ஏத்தும் பொழுது தனியாகவே இருந்தார். திடிரென்று செக் தடுப்பு கள வீரர் பறந்து வந்து பந்தை தடுக்க முயன்றார். அது அவர் காலில் பட்டு வெளியே சென்றது.

ரொனால்டோவின் கோல்:-
ஆட்டத்தின் 79வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து பந்து காப்பாளர் கட்டத்தினுள் மிதந்து வந்தது. மிக மிக நேர்த்தியாக தலையில் முட்டி இலக்கினுள் நுழைத்தார் ரொனால்டோ. பல முயற்சிகளுக்கு பிறகு போர்ச்சுகல் அணி ஒரு இலக்கை அடித்தது. இந்த விடாமுயற்சி மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது போர்ச்சுகல் அணி.

கடைசி 10நிமிடங்களில் ஆட்டம் நடை பெற்று கொண்டு இருந்தது. நாணியின் முயற்சி, அருமையான முயற்சி என்றே சொல்ல வேண்டும். செக் காப்பாளர் பீட்டர் செக் சிறப்பாக தடுத்தார். போர்ச்சுகல் யூரோ 2012 தொடரில் அரையிறுதிக்கு செல்ல கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

செக்குடியரசின் கடைசி வாய்ப்பு:-
செக் வீரர்களுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும். ஆட்டத்தின் 94வது நிமிடத்தில் அவர்களுக்கு ஒரு corner-kick கிடைத்தது. அனைத்து வீரர்களும் போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்தினுள் தான் இருந்தார்கள். பீட்டர் செக் கூட வந்துவிட்டார். ஆனால் இந்த பந்து சற்று தூக்கி வீரர்களை தாண்டி செல்லும் விதமாக அடிக்கப்பட்டது. இந்த முயற்சி தோற்றதால் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

போர்ச்சுகளின் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இலக்கு மூலம், யூரோ 2012இல் அரை இறுதிக்கு போர்ச்சுகல் அணி முதல் முதலாக நுழைந்தது.

No comments:

Post a Comment

பழமொழி