இன்றைய குறள்

Monday, June 25, 2012

யூரோ 2012 நான்காம் காலிறுதி போட்டி இங்கிலாந்து எதிராக இத்தாலி (England Vs Italy)

நான்காம் பிரிவில் முதல் இடம் பிடித்த இங்கிலாந்து அணியும் மூன்றாம் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த இத்தாலி அணியும் பலப்பரிட்ச்சை செய்யும் நான்காம் மற்றும் கடைசி காலிறுதி போட்டி. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதியில் ஜெர்மனியுடன் மோதும்.

ஆட்டம் ஆரம்பித்த மூன்றாது நிமிடத்தில் டி-ரோஸி அடித்த பந்து இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது.



அடுத்த சில நிமிடத்தில் மில்னர் அடித்த பந்தை இத்தாலியின் காப்பாளர் புப்பான் தடுத்தார். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த பந்தை புப்பான் சிறப்பான முறையில் ஒரே கையில் தடுத்தார்.



ஆட்டம் 20 நிமிடத்தை தாண்டியது. வெகு விரைவாக நடந்தேறியது போல் இருந்தது. இருபுறமும் முன்னேறியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.

ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் அருமையான வாய்ப்பு பாலடேல்லிக்கு வழங்கப்பட்டது. அந்நேரத்தில் அவர் மட்டுமே பந்தின் அருகில் இருந்தார். சற்று தூக்கி அடித்திருந்தால் நிச்சயம் இலக்கினுள் அடித்திருக்கலாம. அவர் பந்தை கடத்தி செல்லும் முன் ஜான் தேரி சிறப்பான முறையில் தடுத்துவிட்டார். அருமையான வாய்ப்பு இத்தாலிக்கு இதன் மூலம் தவறியது.



ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் மேலும் ஒரு வாய்ப்பு. இந்த முறை காப்பாளர் கட்டத்தினுள் இருந்த பாலடேல்லிக்கு சிறப்பான ஒரு பந்து வழங்கப்பட்டது. அதை நேராக காப்பாளர் ஹார்டிடம் அடித்தார்.

ஒரு நிமிடத்திற்கு பிறகு இங்கிலாந்து வீரர் வேல்பக்கிற்கு கிடைத்தது. நேராக அடித்திருந்தால் இலக்கினுள் அடித்திருக்கலாம் ஆனால் அவர் இலக்கிற்கு வெளியே அடித்துவிட்டார்.

விறுவிறுப்பாக ஆட்டம் நடந்திருந்தாலும் இத்தாலி வீரர்களே பந்தை 60% தங்களின் வசம் வைத்திருந்தார்கள்.

ஆட்டத்தின் 37வது நிமிடத்தில் இத்தாலியின் கசானோ அடித்த பந்து நேராக இலக்கினுள் நுழைய முயல அதை அருமையாக தடுத்தார் காப்பாளர் ஹார்ட். அடுத்த நிமிடத்தில் மேலும் ஒரு பந்து பாலடேல்லிக்கு வழங்கப்பட்டது. அவர் பந்தின் அருகில் செல்வதற்குள் காப்பாளர் ஹார்ட் முன்னால் வந்து அதை தடுத்தார்.



ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் இங்கிலாந்து காப்பாளர் கட்டத்தினுள் கிடைத்த பந்தை கசானோ அருமையான தலையில் முட்டி பாலடேல்லிக்கு வழங்க. அவர் சறுக்கி அடிக்க அது தடுப்புகள வீரரின் காலில் பட்டு வெளியானது.



ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் இங்கிலாந்து காப்பாளர் கட்டத்தினுள் வெளியே கிடைத்த பாலடேல்லி இலக்கினுள் அடிக்க முயன்று வெளியே அடித்தார். இத்துடன் முதல் பாதி நிறைவடைந்தது. ஆட்டத்தின் முதல் பாதி விருவிருப்பாக நடந்து 0-0 என்று சமநிலையில் இருந்தது.

இரண்டாம் பாதி துவங்கிய இரண்டாம் நிமிடத்தில் அருமையாக இங்கிலாந்தின் காப்பாளர் காட்டினுள் வழங்கப்பட்டது. ஆனால் அதை தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க யாரும் இல்லை. இங்கிலாந்து தடுப்புகள வீரர் தலையால் முட்டி வெளியே தள்ளினார். இதன் மூலம் இத்தாலிக்கு corner-kick கிடைத்தது. அதில் அடித்த பந்தை ஹார்ட் தடுத்தார். பந்து மீண்டும் அவரை நோக்கி வர இங்கிலாந்தின் தடுப்பு வீரர்கள் யாரும் இல்லாமல் டி-ரோஸி தனியாக இருந்தார். ஆனால் இந்த வாய்ப்பை அவர் தவரவிட்டுவிடார். இலக்கினுள் அடிக்காமல் வெளியே அடித்துவிட்டார். மீண்டும் ஒரு வாய்ப்பு இத்தாலிக்கு பரிபோனது.

ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் இங்கிலாந்தின் இலக்கினுள் அடித்த பந்தை அருமையாக தடுத்தார். அது மீண்டும் பாலடேல்லிக்கு கிடைக்க அவர் அடித்த பந்து ஹார்ட் தடுத்து மீண்டும் ஒரு இத்தாலி வீரரிடம் கிடைக்க, அவர் அதை வெளியில் அடித்துவிட்டார். மேலும் ஒரு வாய்ப்பு நழுவியது.

ஆட்டத்தில் இத்தாலியின் ஆத்திக்கமே தொடர்ந்தது. பாலடேல்லிக்கு மேலும் ஒரு வாய்ப்பு. மூன்றும் வீரர்கள் அவரை சுற்றி நிற்க அவருக்கு கிடைத்த பந்தை, கீழே படுத்து பின் பக்கம் அடித்தார். அது இலக்கிற்கு வெளியே சென்றது. ஆட்டத்தின் 63வது நிமிடத்தில் பிர்லோ காப்பாளர் கட்டத்தினுள் வழங்கிய பந்தை டி-ரோஸி வெளியே அடித்தார்.

அடுத்த நிமிடத்தில் தனக்கு கிடைத்த பந்தை அருமையாக கடத்தி சென்று காப்பாளர் கட்டத்தினுள் கொடுத்தார் வால்காட். கரோல் அதை உதைக்க முயல, அவரிடம் பந்து சிக்கவில்லை. முன்னால் இருந்த யங் இலக்கி நோக்கி அடிக்க அது இத்தாலி தடுப்புகள வீரரின் காலில் பட்டு வெளியானது.



ஆட்டத்தின் 72நிமிடத்தில் கிடைத்த free-kickகை அருமையாக காப்பாளர் கட்டத்தினுள் அடித்தார் ஸ்டிபன் ஜெரார்ட் ஆனால் அதை தலையில் முட்டியிருந்தால் நிச்சயம் இலக்கினுள் புகுந்திருக்கும். தவரவிட்டுவிடார். அருமையான வாய்ப்பை ரூனி தவரவிட்டுவிடார். இங்கிலாந்துக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு இது.

ஆட்டம் கடைசி 10நிமிடங்கள். இத்தாலிக்கு மாற்று வீரார்க களம் இறங்கிய நோசெரினோ இலக்கை நோக்கி அடிக்க, உள்ளே புக எத்தனித்த பந்தை ஹார்ட் அருமையாக தாவி வீழ்ந்து தடுத்தார்.



ஆட்டத்தின் கடைசி 5 நிமிடங்கள். இத்தாலி வீரர்கள் இலக்கு அடிக்க தீவிரமாக முயன்றனர். அருமையான வாய்ப்பு இத்தாலிக்கு. நேசெரிநோவுக்கு கிடைத்தது. அவர் இலக்கு நோக்கி உதைத்தார். ஆனால் ஜான்சன் அருமையாக தடுத்து பந்தை வெளியேற்றினார்.

முடிவடையும் கடைசி வினாடிகள். காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்த பந்தை யங், ஆஷ்லே கோள்யிடம் கொடுக்க அவர் பந்தை எத்த, தவழ்ந்து வந்த பந்தை கரோல் தலையில் முட்டி ரூனியிடம் கொடுக்க, இலக்கு பின் பக்கம் இருந்ததால் ரூனி படுத்து அருமையாக அடித்தார். ஆனால் இலக்கினுள் அடிக்கவில்லை.



இத்துடன் 90 நிமிட ஆட்டம் முடிந்தது.

யூரோ 2012 கால்பந்து தொடர் காலிறுதி போட்டிகளில் இந்த போட்டி மட்டும் தான் 90 நிமிட ஆட்டம் முடிந்தும் யாருமே இலக்கு எதுவும் அடிக்காமல் 0-0 சம நிலையில் முடிந்தது.

முதல் 10 நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் இலக்கு அடிப்பதற்கு போராடினர். ஆட்டத்தின் 99நிமிடத்தில் பாலடேல்லி அடித்த பந்து நேராக காப்பாளர் ஹார்ட்டின் கைகளுக்கு சேர்ந்தது. அடுத்த ஒரு நிமிடத்தில் இத்தாலி வீரர் அடித்த பந்து இலக்கின் கம்பியில் பட்டு வெளியானது. இந்த ஆட்டத்தில் இரண்டு முறை இத்தாலி வீரர்கள் அடித்த பந்து இங்கிலாந்து இலக்கின் கம்பியில் அடித்தது. ஆட்டத்தின் 105வது நிமிடத்தில் வால்காட் இத்தாலியின் தடுப்பு வீரர்களை கடந்து வலது பக்கம் சென்று பந்தை இலக்குக்கு அருகில் அடிக்க அது வெளியானது. இத்துடன் கூடுதல் ஆட்டத்தில் முதல் பாதி முடிந்தது. மேலும் 15 நிமிடத்தில் ஆட்டம் சம நிலையில் இருந்தால் நிச்சயம் shoot-out மூலம் தான் ஆட்டத்தை முடிவு செய்யமுடியும்.

ஆட்டத்தின் 109வது நிமிடத்தில் இத்தாலி வீரர்கள் கடும் முயற்சி செய்தார்கள். ஆனால் இங்கிலாந்து வீரர்கள் திறமையாக தடுப்பாட்டம் ஆடி அவர்களின் முயற்சிகளை முறியடித்தனர். இதை தொடர்ந்து இத்தாலி வீரர்களுக்கு free-kick கிடைத்தது. எப்போழ்த்தும் Free-kickஐ சிறப்பாக அடிக்கும் பிர்லோ அடிக்காமல் பாலட்டேலி அடிக்க முயற்சி செய்து வெளியில் அடித்தார். ஆட்டம் நிச்சயம் shoot-outஇல் முடியும் என்ற நிலையில் இருந்தது. கூடுதல் நேரத்திலும் ஆட்டம் 0-0 என்று சமநிலையில் முடிந்தது

உலக கோப்பை கால்பந்து 2006 இறுதி போட்டியில் இத்தாலி பெனால்டி மூலம் தான் கோப்பையை வென்றார்கள்.

பெனால்டி நிலவரம்:-

பாலடேல்லி – இலக்கினுள் அடித்தார்
ஜெரார்ட் – இலக்கினுள் அடித்தார்
(இத்தாலி 1 – 1 இங்கிலாந்து)

மொண்டோளிவோ - வெளியே அடித்தார்
ரூனி - இலக்கினுள் அடித்தார்
(இத்தாலி 1 – 2 இங்கிலாந்து)

பிர்லோ - இலக்கினுள் அடித்தார்
யங் - வெளியே அடித்தார்
(இத்தாலி 2 – 2 இங்கிலாந்து)

நோசெரினோ - இலக்கினுள் அடித்தார்
ஆஷிலே கோள் – புப்பானால் தடுக்கப்பட்டது
(இத்தாலி 3 – 2 இங்கிலாந்து)

டியாமண்டி - இலக்கினுள் அடித்தார்
(இத்தாலி 4 – 2 இங்கிலாந்து)



Inghilterra 0 - 0 Italia Rigori Ing 2 - 4 Ita... by citrusblack83


இத்தாலி இங்கிலாந்தை பெனால்டி மூலம் வீழ்த்தி அரையிருதியினுள் நுழைந்தது. இந்த அணி ஜெர்மனியை எதிர்த்து விளையாடும்.

No comments:

Post a Comment

பழமொழி