17-June-2012இல் பிரிவு 2 (group B) அணிகள் மோதும் கடைசி சுற்று போட்டி. இந்த இரண்டு போட்டிகளும் ஒரே நேரத்தில் துவங்கின. நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் அணியினருக்கு இது வாழ்வா சாவா போட்டி!
கடந்த 2010 கால்பந்து உலகக்கின்ன போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற நெதர்லாந்து அணி கடந்த இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியது. அவர்கள் இந்த போட்டியில் வென்று யூரோ தொடர் போட்டியில் அவர்களை தக்க வைக்க வேண்டும், மேலும் அவர்களுடைய ரசிகர்களை திருப்படுத்தும் வகையில் இந்த போட்டியில் வென்றாக வேண்டும். ஆனால் ஒரு வேலை டென்மார்க் அணி ஜெர்மனி அணியை வெற்றி பெற்றால் (நடக்காத காரியம் தான்) நிச்சயம் நெதர்லாந்து அணி போர்ச்சுகளை அணியை வென்றாலும் அடுத்த சுற்றுக்கு போக முடியாது. என்ன வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் போர்ச்சுகளையும் வீட்டிற்கு அனுப்பலாம். ஒரு வேலை டென்மார்க் அணி ஜெர்மனியுடன் மோதும் ஆட்டத்தில் சமநிலை பெற்றாலும் அதே நிலைமை தான்.
ஆனால் போர்ச்சுகளுக்கு அப்படி இல்லை. அவர்கள் நெதர்லாந்துடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அல்லது சமநிலையில் முடித்தாலோ அவர்கள் அடுத்த சுற்று அதாவது காலிறுதி போட்டிக்கு முன்னேற முடியும். அதனால் அவர்கள் நெதர்லாந்தை விட அதிக முனைப்புடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.
ஆட்டம் துவங்கிய முதல் நெதர்லாந்தின் கை ஓங்கியே இருந்தது. அவர்கள் சிறப்பான துவக்கத்தில் இருந்து நிச்சயம் ஆட்டத்தை கைப்பற்றுவார்கள் என்பது போல் இருந்தது. என்ன தான் பந்தை தன்வசம் வைத்திருந்தாலும் அவர்களால் இலக்கின் அருகில் செல்ல முடியவில்லை. ஆனால் போர்ச்சுகல் அணிக்கு அத்திபூத்தது போல் பந்து கிடைக்கும். உடனே இலக்கினுள் அடிக்க முயன்றனர்.
ஆட்டத்தின் 11னோராம் நிமிடத்தில் வான்-டர்-வார்ட தன்னிடம் பந்து வந்துகொண்டே இருக்கும் பொழுது இலக்கை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தார். போர்ச்சுகளின் காப்பாளர் கட்டத்திற்கு வெளியே இருந்து வேகமாக உதைத்த பந்து சீறி சென்று இலக்கின் வலையில் தஞ்சம் புகுந்தது. இதன் மூலம் ஆட்டத்தில் 12நிமிடத்தில் முன்னிலை வகித்தது. இப்படியே ஆட்டம் முடிந்தால் காலிறுதிக்கு முன்னேறலாம் என்று நினைத்து கொண்டு விளையாடும் பொழுது, ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவரான போர்ச்சுகளின் நம்பிக்கை நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பந்து இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது.
அதே சமையம் டென்மார்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் போடோல்ச்கி ஒரு இலக்கு ஜெர்மனிக்கு பெற்று கொடுத்தார். இதன் மூலம் ஜெர்மனி 1-0 என்றும் நெதர்லாந்து 1-0 என்ற கணக்கிலும் முன்னிலை வகித்தன.
போர்ச்சுகல் சிறப்பான முறையில் தன்னுடைய ஆட்டத்தை வெளிபடுத்தியது. அந்த அணி பந்து கிடைத்த மாத்திரம் அந்த அணி வீரர்கள் இலக்கை நோக்கி விரைந்தனர். ரொனால்டோ இலக்கை நோக்கி அடித்த பந்துகளை காப்பாளர் நேர்த்தியாக தடுத்தார்.
டென்மார்க் அணி, 24வது நிமிடத்தில் கிடைத்த பந்தை அருமையான முறையில் தலையில் முட்டி இலக்கினுள் தள்ளினார் அவ்வணி வீரர் க்ரோன்-தேஹ்லி.அப்பொழுது டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு எதிரான ஆட்டம் 1-1 என்ற முறையில் சம நிலையில் இருந்தன.
ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் போர்ச்சுகளின் நம்பிக்கை நட்சத்திர வீரர் ரொனால்டோ தனக்கு கிடைத்த பந்தை அருமையான முறையில் இலக்கினுள் அடித்தார். அப்பொழுது ஆட்டம் 1-1 முறையில் என்ற போர்ச்சுகல் மற்றும் நெதர்லாந்து ஆட்டம் சம நிலையில் இருந்தன. .
இரண்டு ஆட்டங்களுமே முதல் பாதியில் சமநிலையில் முடிந்தது.
இரண்டாம் பாதி துவக்கத்தில் இருந்தே போர்ச்சுகல் அணி ஆட்டத்தை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு விளையாடியது. தொடர்ந்து நெதர்லாந்தின் இலக்கு நோக்கி தாக்கியவன்னமே விளையாடினர். போர்ச்சுகளிடம் இருந்த முனைப்பு நெதர்லாந்திடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் போர்ச்சுகலின சகவீரர் நாணி தனக்கு வழக்கிங்கய பந்தை சிறப்பான முறையில் இலக்கினுல் அடித்து தங்கள் அணி காலிறுதிக்குள் நுழைய வித்திட்டார் ரொனால்டோ. அதன் பிறகு 82வது நிமிடத்தில் அதே வான்-டர்-வார்ட அடித்த பந்து இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது. ஆட்டத்தின் கடைசி நொடிகளில் ரொனால்டோ அடித்த பந்து கம்பியில் அடித்து வெளியாகியது. அவருக்கு hat-rick தவறிவிட்டது. இத்துடன் போட்டி முடிவடைந்தது. உலக கோப்பையில் இரண்டாம் இடத்தை பிடித்த நெதர்லாந்து அணி யூரோ 2012இல் ஒரு ஆட்டம் கூட வெற்றி பெறாமல் தொடரை விட்டு வெளியாகியது.
டென்மார்கிற்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனியின் ப்லேண்டர் 80வது நிமிடத்தில் ஒரு இலக்கு அடித்தார். இதன் மூலன் டென்மார்க்கின் காலிறுதி கனவு தகர்ந்தது.
இரண்டாம் பிரிவில் இடம் பெற்ற அணிகளில் ஜெர்மனி 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று முதல் இடத்தையும், 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தையும் பிடித்த இரண்டு அணிகளும் கால் இறுதி போட்டிக்கு முன்னேறின.

No comments:
Post a Comment