இன்றைய குறள்

Tuesday, June 19, 2012

யூரோ 2012 பிரிவு 3றில் கடைசி தகுதி சுற்று போட்டி!

குரேஷியா எதிராக ஸ்பெயின்
இத்தாலி எதிராக ஐயர்லாந்து

குரேஷியா அணியும் ஸ்பெயின் அணியும் இயர்லாந்திடம் வெற்றி பெற்றும் இத்தாலி அணியிடம் ஆட்டத்தை சமன் செய்தும் தலா 4 புள்ளிகளுடன் கடைசி தகுதி சுற்றில் மோதுகின்றன. நடப்பு உலக கோப்பை 2010யிலும், யூரோ 2008யிலும் வாகையர் பட்டத்தை வென்ற ஸ்பெயின் அணி தன்னுடைய பலத்தை நிரூபிக்கவேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் காலிறுதி போட்டிக்கு தகுதியடைவார்கள். இத்தாலி அணி ஐயர்லாந்திடம் தோல்வி அடைந்தாலோ அல்லது ஆட்டத்தை சமன் செய்தாலோ இந்த இரு அணிகளும் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடுவார்கள். இது நடக்கக்கூடிய காரியம் இல்லை. இத்தாலி ஐயலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் தான் காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ளதால், அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அந்த அணி கடுமையாக போராடும் என்பது உண்மை. மேலும் சற்று பலம் குறைந்த ஐயர்லாந்தை வெற்றி பெறும் வாய்ப்பு இத்தாலிக்கு அதிகம் இருக்கிறது. ஸ்பெயின் மற்றும் குரேஷியா ஆட்டம் சமநிலையில் முடிந்து இத்தாலி ஐயர்லாந்தை வெற்றி கொண்டால், ஸ்பெயின் இத்தாலி குரேஷியா ஆகிய மூண்று அணிகளும் ஒரே புள்ளியில் இருக்கும். அப்பொழுது ஆட்டங்களின் அடித்த இலக்கை வைத்து காலிறுதிக்கு செல்லும் அணிகளை உறுதி செய்வார்கள்.




குரேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் பாதியில் ஸ்பெயின் பெரிதாக தன்னுடைய திறமையை பயன்படுத்தவில்லை. இலக்கை நோக்கி அடிக்கும் வாய்ப்பையும் ஸ்பெயின் ஏற்படுத்திக்கொள்ள தவறவிட்டுவிட்டார்கள். குரேஷியாவின் தடுப்பு அரனை உடைத்து செல்ல மிகவும் போராடினார்கள் ஸ்பெயின் அணியினர்.

இரண்டாம் பாதியில் 58வது நிமிடத்தில் ஸ்பெயினின் காப்பாளர் கட்டத்துக்குள் மிதந்து வந்தது பந்து. அங்கு ஸ்பெயின் வீரர்கள் யாரும் இல்லை. குரேஷியா வீரர் மொட்றிக் பந்தை இலக்கை நோக்கி தலையால் முட்டினார். நிச்சயம் அது இலக்காகும் என்று நினைத்த குரேஷியா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அவர் ஸ்பெயின் காப்பாளர் காசியாசின் கைகளுக்கு நேராக அடித்தார். அதை தவறவிடாமல் அவரும் பிடித்துக்கொண்டார். 65வது நிமிடத்தில், ஜாவி corner-kick மூலம் எத்திய பந்தை செர்ஜியோ ராமோஸ் தலையால் மூட்டினார் அது இலக்கு கம்பிக்கு மேலே சென்றது. அதே போல் அடுத்து கிடைத்த அதே போன்ற ஒரு பந்தை இனியாஸ்ட்டா அருமையாக உள்ளே கொடுக்க அது தடுப்புக்கள வீரரால் வெளியே அனுப்பப்பட்டது. ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில், 83வது நிமிடத்தில், இனியாஸ்ட்டா அடித்த பந்து குரேஷியா காப்பாளர் அருமையாக தடுத்தார். ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் ஸ்பெயினின் வீரர் பாப்ரிகாஸ் குரேஷியாவின் தடுப்புக்கள வீரர்களை தாண்டி செல்லுமாறு இனியாஸ்ட்டாவுக்கு பந்தை கொடுக்க, அவர் அருமையாக நெஞ்சின் மீது வாங்கி குரேஷியா காப்பாளரிடம் பந்து சிக்காமல் அருகில் இருந்த நாவாஸிடம் கொடுக்க மிக மிக எளிமையாக அதை இலக்குள் அடித்து ஸ்பெயின் காலிறுதிக்கு செல்வதை உறுதி செய்தார். இதன் மூலம் ஆட்டம் முடிவடைந்தது. குரேஷியாவின் காலிறுதி கனவு பறிபோனது. பிரிவு 3றில் ஸ்பெயின் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று ஒரு ஆட்டத்தில் சமநிலையோடு முடித்து 7 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்று காலிறுதி போட்டியினுள் நுழைந்தது.




இத்தாலி எதிராக ஐயர்லாந்து

ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் கிடைத்த corner-kick மூலம் எத்திய பந்தை டி-நத்தாலே அருமையான தலையில் முட்டி ஒரு இலக்கு அடித்து 1-0 என்ற கணக்கில் இத்தாளியரி முன்னிலை பெறவைத்தார்.

இத்தாலியின் காப்பாளர் கட்டத்துக்கு சற்று முன்னால் 59வது நிமிடத்தில் இருந்து ஐயர்லாந்து வீரர் ஆண்ட்ரூஸ் அடித்த பந்தை காப்பாளர் புப்போன் அருமையாக தடுத்தார். ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் கிடைத்த corner-kickஇல் மாரியோ பாலடேல்லி அருமையான முறையில் ஒரு இலக்கு அடித்து 2-0 என்ற முறையில் இத்தாலியை வெற்றியை உருதியாக்கினார். இதன் மூலம் கலந்து கொண்ட மூன்று ஆட்டங்களிலும் ஐயர்லாந்து தோல்வியடைந்தது. இத்தாலி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்று இரண்டு ஆட்டத்தை சமன் செய்து 5புள்ளிகளுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றது.




பிரிவு 3றில் ஸ்பெயின் முதல் இடத்திலும், இத்தாலி இரண்டாம் இடைத்தையும் அடைந்து காலிறுதிக்கு தகுதி பெற்றன.

No comments:

Post a Comment

பழமொழி