பழந்தமிழாக இருந்தாலும்
என்றும் நீ பைந்தமிழ்!
இனிமையாக பேசும் பொழுது
கரும்பாய் இனிக்கும் தமிழ் நீ !
கூரையின்றி இருந்த பொழுது
தஞ்சமளிக்கும் அடைக்கல தமிழ் நீ!
சுவைக்க சுவைக்க திகட்டாத
அமுத தமிழ் நீ!
கோபப்பட்டு பேசும் பொழுது
ரௌத்திரம் கற்பிக்கும் தமிழ் நீ!
சோகமாக இருந்தபொழுது
தோள் கொடுக்கும் ஆதரவு தமிழ் நீ!
தடை பல வந்தாலும்
உடைத்தெறிந்த காட்டாறு தமிழ் நீ!
வாக்கியத்தில் ஜதி சேர்த்து
வெண்பா பாடும் இசைத்தமிழ் நீ!
கொடுமைகளை கண்டு கொதிக்கும்
உணர்ச்சி தமிழ் நீ!
வறுமையில் வாடிய பொழுது
அமுதூட்டும் வள்ளல் தமிழ் நீ!
அடிமை விலங்கு தகர்த்தெறிய
ஆயுதம் தாங்கிய ஆயுத தமிழ் நீ!
என்னை அடையாளம் காட்டிய
முகவரி தமிழ் நீ!
இவ்வுலகில் பிறந்த அனைத்து
சிசுக்களுக்கும்
அம்மா என்று
மழலையாக
கூற வைத்த அன்னைத்தமிழ் நீ!
வல்லினம்
மெல்லினம்
இடையினம், மூன்றும்
உன்னுள் சுமக்கும்
இலக்கிய தமிழ் நீ!
ஒலியில் பிறந்து
ஒளியாக திகழ்ந்து
எங்களுக்கு
வழி காட்டும் தமிழ் நீ!
நூற்றாண்டுகள் பல கண்டு
தன்னிலை கொண்ட தனித்துவ தமிழ் நீ!
என் தாய் மொழி தமிழ் என்பதில், எனக்கு பெருமை.
என்னை சுமந்த தாய்க்கு உன்னால் பெருமை!
உயிர் மூச்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்,
அது நின்றாலும் என் கல்லறை உன்னை தாங்கி நிற்கும்!
.
"இவ்வுலகில் பிறந்த அனைத்து
ReplyDeleteசிசுக்களுக்கும்
அம்மா என்று
மழலையாக
கூற வைத்த அன்னைத்தமிழ் நீ!"
அருமையான பதிவு தோழரே!.. வாழ்த்துக்கள்
நன்றி தோழரே.
Deletearumai, azhagu,Nallaa varuva nee!!!!!
ReplyDeleteநன்றி தோழர் JOPI அவர்களே...
ReplyDeleteஅருமை :)
ReplyDelete