இன்றைய குறள்

Tuesday, May 29, 2012

தமிழ் வார்த்தைகளை கற்போம், பயன்படுத்துவோம் 9

"tion" என்று முடியும் ஆங்கிலவார்த்தைகளுக்கான தமிழ் எழுத்துக்களை இங்கே பதித்துள்ளேன். படித்து பாருங்கள். உண்மையில் பிடித்திருந்தால், இது தமிழர்களுக்கு பயன் தரும் என்று தோன்றினால் உங்களுடைய நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

Abbreviation = சுருக்கம், ஒடுக்கம்
Absorption = உட்கிரகித்தல், மெய்மறந்த கவனம், அகத்துறிஞ்சல்
Accommodation = தங்குமிடம், விடுதி
Activation = செய்ற்பாடு, செயலூக்கம்
Allocation = ஒதுக்கீடு
Animation = அசைவூட்டம், உற்சாகமூட்டு, உயிரூட்டு
Annotation = உரைவிளக்கம், வியாக்கியானம், குறிப்புரை, விரிவுரை
Anticipation = எதிர்பார்த்தல், முன்னறிவு, முன்செயல், முன்நிகழ்வு, முன்கருதுதல்
Association = சபை, கூட்டமைப்பு, கழகம், சங்கம்
Attraction = ஈர்ப்பு, கவர்ச்சி glamour (வசீகரம்)
Authentication = உறுதிப்படுத்துதல்
Authorization = அதிகாரப்பேறு, அதிகாரப் பத்திரம்
Benediction = ஆசீர்வாதம்
Calculation = கணக்கிடல், கணிப்பு, கணக்கீடு
Calibration = அளவீடு, மதிப்பாராய்தல்
Celebration = கொண்டாட்டம்
Centralization = மையகபடுத்துதல்
Classification = வகைபடுதல், பிரிதல், வகையீடு, தரம் பிரித்தல், பாகுபாடு
collection = வசூல், சேகரிப்பு, தொகுப்பு, திரட்டு, கொத்து
Compensation = இழப்பீடு, ஈடு செய்தல்
Condition = நிபந்தனை, நிலைமை, கட்டுப்பாடு
Congratulation = வாழ்த்து, பாராட்டு
Correction = திருத்தம், சரிசெய்தல்
Creation = படைத்தல், ஆக்கல், உருவாக்குதல்
Deduction = பிடித்தம், கழித்தல், குறைத்தல், கழிவு
Deletion = நீக்குதல்
Derivation = வரையறை, வரைவிலக்கணம், வடித்தம்
Detection = உணர்த்துதல், காணுதல், கண்டுபிடித்தல்
Digestion = செரிமானம், சமிபாடு, உணவு செரித்தல்,
Direction = திசை, இயக்குதல், நெறிப்படுத்தல், வழிமுறை
Disruption = இடிவு, தகர்வு, பிளவு, உடைப்பு
Domination = ஆளுமை, ஆதிக்கம்
Donation = நன்கொடை, வெகுமதி, இனாம்
Duplication = இரட்டுத்தல்
Duration = கால அளவு, வரையறைப்பட்டக்காலம்
Edition = வெளியீடு, பதிப்பு
Elaboration = விரிவுபடுத்துதல், விவரித்தல்
Election = தேர்தல், ஓட்டெடுப்பு
Elevation = ஏற்றம், நிலைத் தோற்றம்
Elimination = தவிர்த்தல், விடுதல், நீக்கம், அகற்றுதல், வெளியேற்றம்
Emotion = ஆவேசம், உணர்ச்சி வேகம், அங்கலாய்ப்பு, மனக்கிளர்ச்சி
Escalation = பரப்புதல், விஸ்தரிப்பு
Exhaustion = முழுச்சோர்வு, கடுஞ்சோர்வு
Expiration = காலாவதி, முடிவடைவு
Explanation = விளக்கம், விளக்கவுரை, பொருளுரை, முன்மொழிவு
Fragmentation = கூறுபடுத்தல், துண்டாக்கல்
Friction = உராய்வு, சச்சரவு, முரண்பாடு, தேய்ப்பு
Function = செயல்கூறு, செயல்படுத்து, செயலாற்று, பண்ணம், நிகழ்ச்சி, விழா
graduation = பட்டப்பேறு, வண்ணத்தின் படிநிலை இழைவு , படியளவுக் குறியீடு , படியளவுக் குறி
Hesitation = வேண்டர வெறுப்பு, தயக்கம், தாமதம்
Illumination = ஒளி விளக்கம், தீபாலங்காரம், பிரகாசம்
Illustration = தெளிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம், விளக்கப் படம் , விளக்கப்பட மூலம் விபரித்தல் .
Induction = அறிமுகம், தொடங்கி வைப்பு, தூண்டுதல்
Infection = தொற்று, அழற்சி, பரவுதல்
Inspection = ஆய்வு, பார்வையிடல், பரிசோதனை, கண்காணி
Interruption = தடங்கல், இடைஞ்சல், குறுக்கிடுதல்
Intersection = ஊடறுத்தல், ஊடறுப்பு, குறுக்கீடு
Irrigation = பாசனம், நீர்ப்பாசனம்
Isolation = தனிமை, தனித்திருத்தல்
Junction = இணைப்பு, சந்தி, கூடல், இணைப்பு
Lamination = காப்புறை, மென்தகடு
Liberation = விடுதலை, விடுவிப்பு
Limitation = வரையறை, கட்டுப்படுத்தல், கட்டுப்பாடு
Location = அமைவிடம், இடஅமைவு, இடச் சூழல், சரியான இடம்
Mention = குறிப்பிடுதல், உசாத்துணை
Modulation = அதிர்வு மாற்றமைப்பு
Motion = அசைவு, முயத்தம், முகத்தம், முகட்டம், இயக்கம்
Motivation = உந்துகை, ஊக்கம், தன்முனைப்பாற்றல்
Narration = விவரணம், விவரித்தல், எடுத்துரைத்தல், கதைப்படுத்துதல்
Notation = எண்ணிடல், எண்குறிப்பு, குறியீடு, இலக்கம்
Notification = தெரியப்படுத்தல், அறிவிப்பு, தகவல், அறிவிக்கை
Nutrition = சத்துணவு, ஊட்டச்சத்து, ஊட்டவுணவு, போஷாக்கு
Objection = மறுத்துரைப்பு, எதிர்த்துக் கூறுதல், மறுப்பு, ஆட்சேபனை
Organization = தாபனம், அமைப்பு, உறுகமைப்பு
orientation = தகவல், நடத்தை, செயல், திசையமைவு , திசையமைப்பு
Oscillation = அலைவு, முன்பியல் அலைவு
Partition = பிரிவினை, கூறுகளாகப் பிரித்தல்
Penetration = ஊடுறுவல், பாய்ச்சு, உட்செலுத்து
Perception = மனத்தால் உணர்தல், புரிவு, புலனறிவு, கண்ணோட்டம், உணர்ந்தறிதல்
Petition = வேண்டுகோள், மனு, விண்ணப்பம்
Pollution = தூய்மைக் கேடு, தூய்மை கெடல்
Population = மக்கள் தொகை
Prediction = முன்கூறல், முன் உணர்ந்து சொல்லல், ஊகம்.
Preparation = முன்னேற்பாடு, ஆயத்தம்
Prevention = தடுப்பு
Production = உற்பத்தி, தயாரிப்பு, ஆக்கம்
Prohibition = தடைசெய்தல், தடுத்தல், விலக்கல்
Projection = பிதுக்கம், முந்திட்டம்
Promotion = முன்னேற்றம், உயர்வு, பதவியுயர்வு, தேறுதல், ஆதரித்தல்
Pronunciation = உச்சரிப்பு, ஒலிப்பு
Proportion = விகிதாசாரம், விகிதம்
Protection = பாதுகாப்பு
Publication = வெளியீடு, பதிப்பகம், பிரசுரம்
Punctuation = நிறுத்தக்குறியீடு
Purification = சுத்தப்படுத்து
Radiation = கதிர்வீச்சு, கதிர் இயக்கம், பிரகாசம்
Reception = வரவேற்பு, வரவேற்பறை
Rectification = சீர்/சரி செய்தல், சீர்/சரி படுத்துதல், திருத்தல், தூய்மையாக்கல்
Regulation = வழிமுறை, ஒழுங்குபடுத்துதல், ஒழுங்குவிதி, சீர்ப்பாடு
Reservation = ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு, முன்பதிவுசெய்
Resignation = பதவி விலகல், பணிதுறப்பு
Resolution = தீர்மானம், முடிவு,
Retribution = பழிக்குப்பழி, வஞ்சத்தீர்வு
Revolution = புரட்சி, சுழற்சி, அடிப்படை மாறுபாடு
Rotation = சுழற்சி, சுற்றல், சுழல், சுழல்வு
Satisfaction = மனநிறைவு, திருப்தி
Section = பிரிவு, பகுதி
Selection = தேர்ந்தெடுப்பு, தேர்ந்தெடுக்கப்பெற்றது, முன்தேர்வு, தெரிவு
Sensation = உணர்தல் , புலன்றிவு
Separation = வேறுபடுத்தல், பிரித்து வைத்தல்
Signification = உட்குறிப்பு, உட்பொருள், உட்கருத்து
Solution = கரைசல், தீர்வு
Specialization = சிறப்புத்தேர்ச்சி, முக்கியத்துவம்
Specification = தனிக்குறிப்பீடு, வரியறை
Stabilization = உறுதிநிலைப்பாடு, நிலைபேறுடைமை
Stagnation = தேக்கம்
Station = நிலையம், நிலைத்த, நிலையான, சலனமில்லாத
Subscription = சந்தா
Substitution = பதிலீடு, மாற்றீடு
Suggestion = கருத்து, ஆறிவுரை, யோசனை, கருத்துரை, அலோசனை
Superstition = மூட நம்பிக்கை, மூட பக்தி
Telecommunication = தொலைத்தொடர்பு
Temptation = ஆசை யூட்டுதல், தூண்டி விடுதல், சபலம்
Termination = முடிவுறு, தீர்முனைப்பு, விகுதி, இறுதிநிலை
Tradition = பாரம்பரியம், மரபு, வழமை
Transformation = உருமாற்றம், உருமாறல், தன்மை மாறுதல்
Translation = மொழி பெயர்த்தல், மொழி பெயர்ப்பு
Transportation = கொண்டு செல்லல், அனுப்புதல், எடுத்துச் செல்லுதல், கடத்துதல்
Truncation = முனை சேதிப்பு, உறுப்புக் குறைப்பு
Tuition = தனிப்பயிற்சி, தனிப்படிப்பு, தனிப்போதனை
Underestimation = குறைமதிப்பீடு, தாழ்ந்த மதிப்பீடு
Vacation = விடுமுறைக் காலம், காலிசெய்தல்
Validation = செல்லுபடி சோதனை
variation = மாறுபாடு, வேறுபாடு, பேதம்
Verification = சரிபார்த்தல், ஒப்பாய்வு
Vibration = அதிர்வு, அலைவதிர்வு, துடிப்பதிர்வு, நடுக்கம்
Violation = அத்துமீறல், மீறல், மீறுகை

7 comments:

  1. ஆர்வத்திற்குப் பாராட்டுகள். தமிழ்ச் சொற்களைக் கற்போம் எனத் தமிழிலேயே குறிப்பிடுங்கள். உரரோமன் எண் வேண்டாவே. தமிழ் எண் அல்லது தமிழ் எண்ணிலிருந்து உருவான தற்போதைய பயன்பாட்டு எண்களைக் குறிப்பிடுக.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தோழரே. தவறு எதுவும் வந்துவிட கூடாது என்று நினைத்து தான் எழுதுகிறோம். ஆனால் எங்கேயாவது நடந்துவிடுகிறது.. மிக்க நன்றி தோழரே.

      Delete
  2. ஆங்கிலமே தெரியாதவர்கள் கூட ஆங்கிலத்தில் பேசுவதுதான் வேடிக்கை .இதற் கு முக்கிய காரணம் ஆங்கிலத்தின் தாக்கம் ,
    பிற மொழியினர் கருப்பு மற்றும் வெள்ளைப் படங்களின் மூலம் தமிழைக் கற்றார்களாம் .ஆனால் தமிழர்கள் வண்ணப் படங்களின் மூலம் ஆங்கிலத்தைக் கற்றனர் .இல்லை இல்லை தமிழை மறந்தனர்.

    ஒன்றுக்கு பத்து பல தமிழ் அலைவரிசைகள் இருந்தாலும். ஒரு சில நிகழ்சிகளே தமிழை வளர்க்குமாறு அமைந்துள்ளன.
    மீதமுள்ளவைகள் ஆங்கிலத்தை வளர்கின்றன .ஆங்கிலம் அறியாதவர்கள் கூட ஆங்கிலம் அறிய தூண்டுகின்றன.
    தொடர்ச்சியாக ஒரு ஈரெட்டு வார்த்தைகளைப் பேசும்போது ,தமிழை விட பிற மொழிச் சொற்களே நம் பேச்சில் கலந்துள்ளது
    pen,bus stop,phone,mobile,Rubber,T.V,music,hotel,road,school,college முதலியன..
    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் .
    இதில் வேடிக்கை என்னவென்றால் ஆங்கிலமே தெரியாதவர்கள் பேசுவதுதான்
    இன்று சங்கம் வைத்து வளர்த்த தமிழை சமச்சீர் கல்வியில் மட்டுமே காண முடிகிறது .
    புராணங்களில் அகத்தியர் சிவனிடமிருந்து தமிழைப் பெற்றதாக கூறுகின்றனர். இது தமிழின் தோற்றத்தை விளக்குகிறது . மிகப் பழமையான முற்காலத்தில் தோன்றிய நம் தாய் மொழி தமிழ் , இக்காலத்தில் பின்னுக்கு தள்ளப்பட்டு இருப்பதை சிறிது சிந்தித்து பார்க்க வேண்டும்.
    ஏன் ,எப்படி என்று சிந்தித்தால் மட்டும் போதாது ; எப்படி இவ்வாறு ஆனதுஎன்று சிந்திக்க வேண்டும் .
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே. உங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி. உங்களுக்கு தெரிந்த சங்கதியை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி.

      Delete
  3. வரவேற்கிறேன் தங்கள் பற்றை,,தொடருங்கள்.

    ReplyDelete
  4. really u have a gud job.... keep it up.....

    ReplyDelete

பழமொழி