திசை தேடியே நான் திரிகிறேன்
விழியாக நீயே வா
துவண்டு போய் நான் துடிக்கிறேன்
இளைப்பாற நீயே வா
இருளிலே சிக்கி தவிக்கின்றேன்
ஒளியாக நீயே வா
மழையினில் நனைகின்றேன் குடையாக நீ எங்கே
புயலினில் நிலைக்குலைந்தேன் மறைப்பாக நீ எங்கே
நடுக்காட்டினில் மாட்டிக்கொண்டேன் வழியாக நீ எங்கே
நீ இல்லாமல் நான் நிழலோடு மறைகிறேன்
திசை தேடியே நான் திரிகிறேன்
விழியாக நீயே வா
துவண்டு போய் நான் துடிக்கிறேன்
இளைப்பாற நீயே வா
கரைதேடி அலைகின்றேன் கலங்கரை விளக்கே நீ எங்கே
வறண்டபாலையில் வாடுகிறேன் கருமுகிலே நீ எங்கே
வெள்ளத்தில் மூழ்கின்றேன் மிதவையே நீ எங்கே
நீ இல்லாமல் நான் எனக்குள்ளே புதைந்தேன்
திசை தேடியே நான் திரிகிறேன்
விழியாக நீயே வா
துவண்டு போய் நான் துடிக்கிறேன்
இளைப்பாற நீயே வா
No comments:
Post a Comment