படம்: வழக்கு என் 19/8
பாடியது: தண்டபாணி
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
உன் கண்ணுக்குழி அழகினில் தான் என் கற்பனைய நான் வளர்த்தேன்
உன் நெஞ்சிகுழி மீது தான்டி என் நிம்மதிய நான் புதைச்சேன்
அடி பெண்ணே நீயும் பெண் தானோ
இல்லை பிரமன் செய்த சிலை தானோ
அடி பெண்ணே நீயும் பெண் தானோ
இல்லை பிரமன் செய்த சிலை தானோ
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
மணலில் கட்டி வைத்த கோட்டை, அதை மழை வந்து கரைததென்ன
எனக்குள் கட்டி வைத்த கோட்டை, அதை நீ வந்து உடைத்ததென்ன
உள் நெஞ்சம் எனக்குள்ளே, ஐயோ உன் பெயரை சொல்கிறேதே
என்னை விட்டு உயிர் போகும், அந்த உயிர் வந்து உன்னை சேரும்
நான் உயிரோடு தான் வாழ்ந்தால், பெண்ணே உனக்காக காத்திருப்பேன்
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
மெழுகு போல் உருகினேனே, நீ தீயாக சுட்டதினால்
நீரினில் முழ்கிக்கொண்டு,நான் நீருக்கு அலைந்தேனே
கண் பார்த்த பார்வைகளை, உன் உதடுகள் பொய் சொல்லலாம்
கானல் நீர் கண்டத்தை, என் இதயத்தில் மறந்திடுமோ
புள்ளி வைத்து கோலம் போட்டால், நல்ல சித்திரம் ஆயிடுமா
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
வானத்தையே எட்டிப்புடிப்பேன் பூமியையும் சுத்திவருவேன்
அப்படியே..பாடலின் ஒலி வடிவமும் இணைத்து இருக்கலாம்...
ReplyDeleteதோழரே...... இந்த பாடலை இணையதளைதில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதற்காக தான் தவிர்த்துவிட்டேன்.......
ReplyDelete