இன்றைய குறள்

Wednesday, January 4, 2012

என்னுளே தமிழ் --உயிர் உள்ளவரை


படம்: மின்சார கனவு
பாடல்: அன்பென்ற மழையிலே



கீழே இருக்கும் வரிகளை வாசிக்கும் பொழுது தயவு செய்து மேலே குறிப்பிட்டு இருக்கும் பாடலின் ராகத்தோடு படியுங்கள்...நன்றி



தமிழ் என்ற சொல்லிலே உயிரும் கரையுதே, அது எங்கள் தாய்மொழியே
முதல் வார்த்தை உதிர்க்கும் சிசுக்கள் உலகிலே, அம்மா என்று தானே
துன்பங்கள் பல கண்டு, எங்கெங்கும் ஓடியே, பிழைப்பை தேடிணோமே
உலகெங்கும் பிரிந்தும், மீண்டும் இணையவும், உதவுது தமிழ் மொழியே
[தமிழ் என்ற]

வான்புகழ் வள்ளுவர் வாழ்வை வகுத்ததை உணர்த்துது திருக்குறளே
அறிவியல் அணுவை பிளந்து எடுத்தது எங்கள் தொல்காப்பியமே
வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலாரும் எங்கள் தமிழகத்திலே
உலக மொழியாம் எங்கள் தமிழே என்றும் செம்மொழியே
[தமிழ் என்ற]

இதை இசையோடு கேட்க: சொடுக்குங்கள்

No comments:

Post a Comment

பழமொழி