இன்றைய குறள்

Wednesday, July 2, 2025

தாலாட்டு பாட்டு - 3

குட்டி குட்டி விழிகள் மூடி
உறங்க வேண்டும் மயூரா 
நீ உறங்க வேண்டும் மயூரா 
அழகா உறங்க வேண்டும் மயூரா 

கேள்வி கேட்க யாருமில்லை 
இளைப்பாறு மயூரா 
நீ இளைப்பாறு மயூரா
சுகமா இளைப்பாறு மயூரா

பிஞ்சு கால்களை உதைத்துக்கொண்டு 
தூக்கம் தொலைக்காதே மயூரா 
நீ தூக்கம் தொலைக்காதே மயூரா
நல்ல தூக்கம் தொலைக்காதே மயூரா

கை இரண்டும் ஆட்டிவிட்டு 
தூளி திறக்காதே மயூரா
கண்மூடி தூங்கு மயூரா
நீ கண்மூடிதூங்கு மயூரா

ஆராரோ நானும் பாட 
தூங்க வேண்டும் மயூரா 
மெல்ல  தூங்கவேண்டும் மயூரா 
நீ தூங்கவேண்டும் மயூரா 

ஆடிவரும் தொட்டிலிலே 
அசைந்து தூங்கு மயூரா 
நீ அசைந்து தூங்கு மயூரா 
மெல்ல அசைந்து தூங்கு மயூரா 

பாட்டியோட புடைவையிலே 
படுத்து உறங்கு மயூரா 
நீ படுத்து உறங்கு மயூரா 
சமத்தா படுத்து உறங்கு மயூரா 

Tuesday, June 17, 2025

தாலாட்டு பாட்டு - 2

 நள்ளிரவு நேரத்திலே, நீ 
அமைதியாக தூங்கவேண்டும் ; 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

குட்டி குட்டி கண்ணை உருட்டி , நீ 
இருளில் எதையோ தேடுகிறாய் 
சின்ன கழுத்தை தூக்கியே, நீ 
எதனை நிமிர்ந்து பார்க்கின்றாய் 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

மழலை குரலில் குலவை போட்டு 
உறக்கம் மறந்து என்னை உசுப்புகிறாய் 
இரவு பொழுதினில் குலவை சத்தம் 
என் காதை தைத்து எழுப்பியது 
களைப்பு தீர ஓய்வு வேண்டும் 
அதற்கு,
ஆழ்ந்த நித்திரை உனக்கு வேண்டும் 
நிம்மதியான உறக்கம் இருந்தால் 
காலை பொழுது என்றும் சிறப்புறும்

ஆராரிரோ பாடி உன்னை 
தூங்க வைக்க முயல்கிறேனே 
குட்டி கை, காலை ஆட்டி, நீ 
தூங்க மறுத்து ஆடம் பிடிக்கிறாய் 
ஆரிராரோ தங்க மகனே 
நீ மெல்ல மெல்ல விழிமூடு 
உறக்கம் உன்னை ஆட்கொள்ளவே  
ஆரிராரோ நானும் பாட 
அரிராரோ ஆரிராரோ 
ஆராரிரோ ஆரிராரோ 
தாலேலோ தாலேலோ 
தாலேலோ தாலேலோ

தாலாட்டு பாட்டு - 1

மெல்ல மெல்ல சூரியனும் 
நம்மைவிட்டு தூரமாக (2)
விலகி போனதே;
அது,  
பகலை விழுங்கி போனதே;
வெளிச்சம் மறைந்து போனதே 
ஆராரோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ 

வெள்ளியும் முளைக்குதே 
நட்சத்திரங்கள் ஜொலிக்குதே (2)
நேரமும் ஆனதே கண்ணே; நீ 
கண்ணுறங்கும் நேரம் ஆனதே ஆஆ
கண்ணுறங்கும் நேரம் ஆனதே 
ஆராரோ ஆரிராரோ 
ஆராரோ ஆரிராரோ 

Sunday, March 30, 2025

தாலாட்டு பாடல் வரிகள்

 

பாடகி சைந்தவி அவர்கள் பாடிய தாலாட்டு பாடல் வரிகள்

 மாமன் அடிச்சானோ மல்லியப்பூ செண்டாலே,                   மன்னவனே அழலாமோ தேம்பி தேம்பி அழலாமோ

அம்மா அடிச்சாளோ அல்லிப்பூ செண்டாலே,                            ஆனந்த பொன்மணியே தேம்பி தேம்பி அழலாமோ

அத்தை அடித்தாரோ அரளிப்பூ செண்டாலே,                        ஆடிவரும் மயிலழகே தேம்பி தேம்பி அழலாமோ

பாட்டி அடித்தாரோ பாலூட்டும் கையாலே,                                      பட்டு வண்ண ரோசாவே தேம்பி தேம்பி அழலாமோ

தாத்தா அடித்தாரோ தாழை நார்த் தலைப்பாலே                                தத்தி வரும் பூரதமே தேம்பி தேம்பி அழலாமோ

சித்தி அடிச்சாளோ செண்பகப்பூ செண்டாலே.                 சின்னஞ்சிறு ஓவியமே தேம்பி தேம்பி அழலாமோ

ஆரடித்தார் நீயழ அடிச்சாரைச் சொல்லியழு                ஆணையிட்டு விளங்கிடுவோம் இனியும் அழுகை வேணாமப்பா

பழமொழி