குட்டி குட்டி விழிகள் மூடி
உறங்க வேண்டும் மயூரா
நீ உறங்க வேண்டும் மயூரா
அழகா உறங்க வேண்டும் மயூரா
கேள்வி கேட்க யாருமில்லை
இளைப்பாறு மயூரா
நீ இளைப்பாறு மயூரா
சுகமா இளைப்பாறு மயூரா
பிஞ்சு கால்களை உதைத்துக்கொண்டு
தூக்கம் தொலைக்காதே மயூரா
நீ தூக்கம் தொலைக்காதே மயூரா
நல்ல தூக்கம் தொலைக்காதே மயூரா
கை இரண்டும் ஆட்டிவிட்டு
தூளி திறக்காதே மயூரா
கண்மூடி தூங்கு மயூரா
நீ கண்மூடிதூங்கு மயூரா
ஆராரோ நானும் பாட
தூங்க வேண்டும் மயூரா
மெல்ல தூங்கவேண்டும் மயூரா
நீ தூங்கவேண்டும் மயூரா
ஆடிவரும் தொட்டிலிலே
அசைந்து தூங்கு மயூரா
நீ அசைந்து தூங்கு மயூரா
மெல்ல அசைந்து தூங்கு மயூரா
பாட்டியோட புடைவையிலே
படுத்து உறங்கு மயூரா
நீ படுத்து உறங்கு மயூரா
சமத்தா படுத்து உறங்கு மயூரா
No comments:
Post a Comment