இன்றைய குறள்
Tuesday, January 7, 2020
அக்னி ஆட்டம்
பசுமை
அழகை சுமந்த அலங்காரம்,
ஓங்கி
வளர்ந்த மரங்களின் கம்பீரம்,
பொறாமை
தாளாமல் காத்திருந்த நேரம்,
நெருப்பை
நம்பி பூசிய அரிதாரம்,
கனலை
ஏந்தி ஏமார்ந்த துயரம்,
காற்றும்
சேர்ந்து ஆடிய கோரம்,
நம்பி
வாழ்ந்த உயிர்களுக்குள் கலவரம்,
இருப்பிடம்
ஒழித்து பலி கொண்ட விவகாரம்,
வாழ்விடம்
எரித்து உயிர் காவுகொண்ட சம்ஹாரம்,
மிச்சம்
மீதி
உதவி
எதிர்பாத்து ஏந்திய கரம்,
நீர்த்துளிகள்
மழையாய் அருளிய வரம்,
காக்கப்படுமா
வாயில்லா உயிரினம்,
செய்வதறியாது
திகைத்து நிற்கும் மானிடம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment