இன்றைய குறள்

Saturday, April 18, 2015

மழை துளிகள் வாழ்க்கையிலே பாடல் வரிகள் [சென்னை உங்களை அன்போடு அழைக்கிறது பாடல் வரிகள்]


படம்: சென்னை உங்களை அன்போடு அழைக்கிறது
பாடல்: மழை துளிகள்  வாழ்க்கையிலே
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்
இசை: கேம்லின் ராஜா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்ரா

மழை துளிகள் வாழ்க்கையிலே
நீ தான் பொழிய வைத்தாய்
பிடித்த ஒரு பேருணர்வை
நீ தான் வருடிவிட்டாய்
இவள் கொண்ட தனிமைகள் போனதே
இதுவரை நடந்தவை மாறுதே
அழுகையின் சுவடை அடித்து நொறுக்கினாய்

மழை துளிகள் வாழ்க்கையிலே
நீ தான் பொழிய வைத்தாய்


காற்றோடு ஓர் இலை போலே
போனதொரு வாழ்க்கையே
காணாத ஆனந்தம் யாவும்
காட்டுது உந்தன் பார்வையே
நேற்றோடு வாடையாவும்
வீட்டை விட்டு போனதே
ஊற்றாக உந்தன் நேசம்
ஈரப்பதம் சேர்த்ததே
நீ விடைக்கொடுக்க நான் நினைப்பிடிக்க
ஓர் பாதை விரியும்
போர் கலவரத்தில் நான் மயங்கிவிட
வா மாண்டு கிடப்போம்
பூட்டி கிடந்தேன் வாசல்... திறந்தாயடா


வாழாத வாழ்க்கை ஒன்றை
நானும் இன்று வாழ்கிறேன்
தோளோடு தோளினை சேர்ந்து
தேடல்களில் பூக்கிறேன்
பூ உதிர்ந்து விட வேர் மறந்துவிட
நீ கையில் எடுத்தாய்
யார் உடல்தனில் யார் உயிர் இருக்கும்
நம் வாழ்வு பிரியும்
வாழ்க்கை முழுதும் சேர்ந்தே
இக்கணத்தில் வாழலாம்

No comments:

Post a Comment

பழமொழி