இன்றைய குறள்

Wednesday, February 18, 2015

பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க [தொப்பி பாடல்வரிகள்]


படம்: தொப்பி
இசையமைப்பாளர்: ராம் பிரசாத் சுந்தர்
பாடியவர்: வேல்முருகன்

மலை மேல வாழ்ந்த
சனம் மனம் நொந்து வாடுதுங்க
குற்றப்பரம்பரைன்னு முத்திர குத்துனாண்டா வெள்ளைக்காரன்
அந்த முத்திரையை அழிச்சு முகமுடி கிழிச்சி
நான் ஆவேண்டா போலிஸ்காரன்
நான் ஆவேண்டா போலிஸ்காரன்

பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க
பார்லிமண்டு கூடி எங்க பாட்ட யோசிங்க
பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க
பார்லிமண்டு கூடி எங்க பாட்ட யோசிங்க
அந்த காலம் தொடங்கி நாங்க ஆதிவாசிங்க
ஆடு மாடு கூட எங்க சாதி சனம் ஆயாச்சுங்க
ஊரும் பேரும் இல்லாமலே நாங்க
ஒரு பாவமும் பாக்கலையே நீங்க
அட வாழ்க்க வேணும்மையா வாங்க
எங்க காடும் மலமேடும்
உங்க வேட்டைக்காடா ஆயிபோச்சி

தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா

எங்களுக்கும் நிலம் இருந்தது எல்லாம் என்னாச்சு
வெள்ளைக்காரன் கூட்டத்துக்கு பண்ண வீடாச்சு
காட்டுக்குள்ள கனிம வளம் எல்லாம் என்னாச்சு
கூட்டுக்குள அடிப்பவங்க கையில் போயாச்சு
அட நீதி நியாயம் இல்லையா
ஒரு கேள்வி கேட்க இங்க நாதி இல்லையா
நமக்கு மானம் சொரணை இல்லையா
இந்த மண்ணும் காடும் மக்கள் சொத்து
எல்லா நாளும் எங்கள் வித்து டா.........

தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா

எனக்கென்ன ஒரு கனவு இருக்குது
எட்டு திச வெல்லும் தினவு இருக்குது
காடு பயபுள்ள வம்சம் பிறந்தவன்
காவகாரனாய் ஆவ துடிக்கிறேன்
எங்க இன மக்கள் கண்ணு முழிக்கவும்
எங்க பரம்பர தண்ணி குடிக்கவும்
எங்க ஊரில் மிகநின்னு நிலைக்கவும்
காக்கியும் தொப்பியும் மாட்ட போறேன்
புடிச்சா புளியங்கொம்பு விடவேமாட்டேன்
விதைகள் எடுக்காம வரவேமாட்டேன்
அணிஞ்சா காக்கியும் தொப்பியும் அசரவே மாட்டேன்
அட தொட்டதெல்லாம் வெற்றி தானே வா

தேனை எடுத்தவன் வாழ்க்க உப்பு கரிப்பதா
தினைய வெதச்சவன் வினைய தான் அறுப்பதா
காட்டு பறவைகளும் கைதிகள் ஆவதா
ஆதிவாசிகளும் அகதிகளாய் போவதா

பாவப்பட்ட நாங்க இந்த காட்டுவாசிங்க




No comments:

Post a Comment

பழமொழி