இன்றைய குறள்

Thursday, December 25, 2014

கண்ணான பூமகனே பாடல் வரிகள் [தண்ணீர் தண்ணீரி பாடல் வரிகள்]


படம்: தண்ணீர் தண்ணீர்
பாடல்: கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
பாடலாசிரியர்: வைரமுத்து
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

அன்றே இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்கள் மக்கள் தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் அவலத்தை திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்த பாடல் ஒரு சோகத்தாலாட்டு. மிக அருமையான பாடல் வரிகள் வைரமுத்து வாயிலாக நமக்கு கிடைத்துள்ளது.




கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே

ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை
கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கை சக்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்
காயப்பட்ட மாமனின்று கண்ணுறக்கம் கொள்ளவில்ல
சோகப்பட்ட மக்களுக்கு சோறு தண்ணி செல்லவில்ல
ஏகப்பட்ட மேகமுண்டு மழை பொழிய உள்ளமில்ல

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

கால்முளைச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே
கால்முளைச்ச மல்லிகையே நான் கண்டெடுத்த ரோசாவே
நீ தேன் வச்ச அத்தி பழம் முத்தம் தரும் முத்து சரம்
தண்ணி தந்த மேகமின்று ரத்தத்துளி சிந்துதடா
காத்திருந்த பாணைக்குள்ள கண்ணீர் துளி பொங்குதடா
வீட்டு விளக்கு எரிவதற்கு கண்ணீர்
எண்ணை இல்லயடா

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
ஆத்தா அழுத கண்ணீர் ஆறாக பெருகி வந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை

கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே
கண்ணுறங்கு சூரியனே

No comments:

Post a Comment

பழமொழி