இன்றைய குறள்

Monday, July 14, 2014

உலகக்கோப்பை கால்பந்து 2014 இறுதி போட்டி

உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனி அணியும் அர்ஜென்டினா அணியும் மோதின. 1990ஆம் ஆண்டு இரு அணியினரும் இறுதி போட்டியில் ஆடிய பொழுது ஜெர்மனி  கோப்பையை வென்றது. அதற்கு பழி வாங்கும் எண்ணத்தில் துவங்கியது அர்ஜென்டினா.

ஆட்டம் விறுவிறுப்பாகவே இருந்தது. இறுதி போட்டி எப்படி இருக்க வேண்டும் என்று இரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அதே போல இருந்தது.

நிறைய பேர் ஜெர்மனி எளிதாக வெற்றி பெரும் என்று சொன்னார்கள். ஆனால் அர்ஜென்டினா அணியினர் மிக மிக அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  நட்ச்சத்திர வீரர் மெஸ்ஸிடம் பந்து சென்றவுடன் நான்கு ஜெர்மனி வீரர்கள் அவரிடம் சூழ்ந்து பந்தை தடுக்கம் முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டம் ஆரம்பித்தது போல இருந்தது 43 நிமிடங்கள் கடந்தது.

அர்ஜெண்டினாவின் காப்பாளர் ரோமெரோ மிக அற்புதமாக நான்கு முறை பந்தை இலக்கினுள் செல்லாமல் தடுத்தார். அர்ஜெண்டினாவின் ஹிகுவாயின் தனக்கு கிடைத்த மிக மிக எளிதான வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். முதல் பாதி முடியும் முன்பு ஜெர்மனி அணி கிட்டத்தட்ட இலக்கினுள் பந்தை அடித்து விட்டது போல இருந்தது. ஆனால் அது இலக்கின் கம்பியில் அடித்து வெளியானது.

இரண்டாம் பாதி துவங்கியவுடன் மெஸ்ஸி பந்தை இலக்கினுள் அடிக்க முயன்றார் அது இலக்கிற்கு சற்று தள்ளி சென்றது. ஜெர்மனி அணியினர் பந்தை தங்களிடம் வசப்படுத்திய வன்னம் இருந்தனர். பிரேசில் அணியிடம் எளிதாக இலக்கு அடித்த ஜெர்மனி அணியினர் அர்ஜென்டினா அணியிடம் சற்று திணறியது போலவே தெரிந்தது.

அர்ஜென்டினா அணியினர் மிக மிக அருமையாக ஆடினர். ஜெர்மனி அணியினரின் முன்னேறுவதை சிறப்பாக தடுத்து ஆடினர். பந்து ஜெர்மனி வசம் இருந்தாலும் ஜெர்மனி அணி வீரர்கள் இரண்டு பேர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

இரண்டாம் பாதியில் ஜெர்மனி அணியினர் பந்தை அர்ஜென்டினா வீரர்களிடம் கிடைக்ககூடாதது போல விளையாடினர். ஆட்டம் 60வது நிமிடத்தை நெருங்கியது. இந்த நேரத்தில் உடனுக்குடன் அர்ஜென்டினா வீரர்கள் இருவர் மஞ்சள் அட்டை பெற்றனர்.

90" நிமிடம் ஆட்டம் முடிவடைந்த நிலையில் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

கூடுதல் நேரத்தில் அர்ஜென்டினா அணிக்கு அருமையான வாய்ப்பு பெலாசியோவிற்கு கிடைத்தது. அதில் இலக்கு அடிக்க தவறிவிட்டார்.  அதிகப்படியாக வழங்கிய நேரத்தில் முதல் பாதியில் இரு அணியினரும் ஒரு இலக்கு கூட அடிக்கவில்லை. ஆட்டம் சமநிலையில் இருந்தது.

ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் மரியோ கோட்சா இலக்கினுள் அடித்து ஜெர்மனியின் வெற்றியை உறுதி செய்தார். முதல் முறையாக தென்அமேரிக்கா நாட்டில் ஐரோப்பியா அணி உலககோப்பையை வெல்லவது உறுதியாகிவிட்டது.

மீண்டும் ஒரு முறை அர்ஜென்டினா அணி ஜெர்மனியிடம் உலகக்கோப்பை ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.

2014 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி வாகையர் பட்டம் சூடியது.

1 comment:

  1. ரூல்ஸ்July 14, 2014 at 9:14 AM

    அருமையான பதிவு உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

பழமொழி