இன்றைய குறள்

Thursday, May 29, 2014

என்னை தொட்ட உணர்வு



நீ தானோ என்ற ஆர்வத்தில்
உறக்கம் கலைந்தேன்

ஆம்,

மனதை தொட்டுவிட்டாய்

கண்விழித்த பொழுது
உன் தகவல்..

மறந்து போன தூக்கம் பெற
தாலாட்டாய் உன் தகவல்கள்
இசையாய் என் அலைபேசி சிணுங்கல்கள்

இமைகளை மூடி விழிமறைத்தேன்
என் கனவில்
உன் விழிகளை நான் திறந்தேன்

தொடமுடியா வானத்தில் நீயும் நானும்

ஏதோ ஒரு இடைவெளி
ஆம்
நிலவில் நீ தெரிகிறாய்
நினைத்த கணத்தில் என் அருகிலும்

ஆகா எத்தனை அழகு கனவு

மீண்டும் இரவிற்கு காத்திருக்கேன்
விடிந்துவிட்ட பொழுதினில்  

1 comment:

பழமொழி