கண்ணிருந்தும் பார்வையில்லை
உன் தகவல் பாராமல்
செவிகளிருந்தும் ஓசையில்லை
உன் குரல் கேளாமல்
விரல்களிருந்தும் பிடிப்பில்லை
உன் விரல் கோர்க்காமல்
கால்களிருந்தும் பயணமில்லை
உன் துணையில்லாமல்
இதயமிருந்தும் துடிப்பில்லை
உன் இதயம் சேராமல்
மூச்சிருந்தும் உயிரில்லை
உன் காதல் இல்லாமல்
நடைபிணமாய் நான்
No comments:
Post a Comment