இன்றைய குறள்

Thursday, April 10, 2014

பயமறியா பொழுதுகள்


சிரித்த பொழுதுகள்
ரசித்த நிகழ்வுகள்
மகிழ்ந்த நாட்கள்
அழுத நிமிடங்கள்
படித்த இரவுகள்
பயந்த தேர்வுகள்
மதித்த விரிவுரையாளர்கள்
வியந்த பேராசிரியர்கள்
மறந்த சோகங்கள்
நெகிழ்ந்த சம்பவங்கள்
அனைத்தையும்
அசைபோடுகிறேன்.............

என் நினைவுகளில்
அழகான சாரலாய்
கல்லூரி நாட்கள் மட்டுமே
வருகிறது!!!!

நண்பர்களே நன்றி தெரிவித்து
உங்களை எல்லாம்
பிரிந்துபோகவோ
பிரித்துவிடவோ
எண்ணமில்லை.......

இன்னமும் என்
சிந்தையில்
நாம்
நட்போடு கரம்கோர்த்து
பழகிய நாட்கள்
அழகினும் அழகாக...............

3 comments:

  1. அருமை . .

    நட்போடு கரம்கோர்த்து
    பழகிய நாட்கள் உண்மையில் பயமறியா பொழுதுகளே

    ReplyDelete
  2. இனிய அழகிய நினைவுகள் மறக்க முடியாது...

    ReplyDelete
  3. நட்பிருக்கும் போது பயம் இல்லை... பயம் இருக்கும் போது உடன்
    நட்பிருக்கும்.

    ReplyDelete

பழமொழி