இன்றைய குறள்

Wednesday, January 22, 2014

இறுதிவரை


என்னை மறந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
உன் விழிகள்
பேசும் வார்த்தைகளை....
அடடா சில நேரங்களில்
பாடவும் பாடுகிறதே

எனக்கு மட்டும்
பாடும் பாடலால்
என் நிலை மறந்தேன்
என் பசி மறந்தேன்

சில நேரங்களில்
மௌனத்தின் பலம் அறிந்தேன்
உண்மையின் வலி உணர்தேன்

அழகான காதல் உணர்ந்தேன்
அன்பான பாசம் கண்டேன்
உன்னோடு கை கோர்த்து
வாழ்க்கையில் பயணிக்க ஆசைப்படுகிறேன்

4 comments:

 1. வணக்கம்

  சிறப்பான கவிதை...தங்களின் அன்புக்கு உரித்தானவலுடன் தங்களின் பயணம் தொடரட்டும்..... எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. விரைவில் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்...

  ReplyDelete

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.