இன்றைய குறள்

Wednesday, December 4, 2013

எங்க போற மகனே [பாடல் வரிகள்]


பாடல்: எங்க போற மகனே
படம்: மதயானை கூட்டம்
பாடியவர்: தஞ்சை செல்வி
இசையமைப்பாளர்: என்.ஆர்.ரகுநந்தன்
பாடலாசிரியர்: ஏகாதசி

உணர்ச்சி மிகுந்த வரிகள். எளிய வார்த்தைகளாக இருந்தாலும் மனதை பாரமூட்டும். மகன், தன்னையும் கிராமத்தையும் பிரிந்து செல்லும் பொழுது, தாய் பாடும் உருக்கமான பாடல்.முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளை கோர்த்து தமிழ் மனம் வீசும் சோக பாடல்.


எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊரைவிட்டு போற தாய் வேர விட்டு போற
சண்டாள சணமே விட்டு போறது உன் இனமே
இருக்குது எட்டு திசை    நீ
போறது எந்த திசை

சிரிப்பை மறந்தாய் சின்னதாக இறந்தாய்
உனக்கு மருந்தாய் இருக்கிறாள் ஒரு தாய்
குத்திவச்சி அரிசிதான் உலையுள கிடக்குது
பெத்துபோட்ட வயிறுதான் பத்திக்கிட்டு எரியுது

எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊரைவிட்டு போற தாய் வேர விட்டு போற
சண்டாள சணமே விட்டு போறது உன் இனமே
இருக்குது எட்டு திசை    நீ
போறது எந்த திசை

வெத்தல கொடி ஒண்ணு நெருப்புல படர்ந்திடுச்சே
பெத்தவளின் மடிபிரியும் பெருந்துயர் நடந்திடுச்சே
சோறுட்டும் சொந்தபந்தம் சூத்தியாக பேசியிடுச்சே
வேரறுத்த சாதிசனம் வெட்டருவா வீசிடுச்சே
என்னஇது கணக்கு இடிமட்டும் உனக்கு
சாதிசனம் எதுக்கு சாமியும்தான் எதுக்கு
வெயில சுமந்து வித்துகிட்டு போறதெங்கே
இருட்ட பாய்போல் சுருக்கிட்டு போறதெங்கே

எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊரைவிட்டு போற தாய் வேர விட்டு போற
சண்டாள சணமே விட்டு போறது உன் இனமே
இருக்குது எட்டு திசை    நீ
போறது எந்த திசை

வழித்துணை இல்லாமல் வனவாசம் போவதுபோல்
கரையெல்லாம் நதியாட்டம் கண்ணா நீயும் போறதெங்கே
கல்விழுந்த குளம்போல கலங்கிடுச்சே உன் புழப்பு
பூவிழுந்த கண்ணபோல போயிடுச்சே உன் புழப்பு
நெஞ்சுக்குழி ஓரம் பச்சகுத்தி போற
பச்சைக்கிளி ஒன்னு காத்துகிட்டு கிடக்கு
செல்லமே செடியே செங்காட்டு சித்திரமே
முல்லையே கொடியே குப்புறத்து வழி நீயே

எங்க போற மகனே
நீ எங்க போற மகனே
ஊரைவிட்டு போற தாய் வேர விட்டு போற
சண்டாள சணமே விட்டு போறது உன் இனமே
இருக்குது எட்டு திசை    நீ
போறது எந்த திசை

No comments:

Post a Comment

பழமொழி