அன்பு தோழியே
நினைத்த இடத்தில் நீ
இருப்பாய் என்று
நம்பிக்கை பயணம்
துவக்க ஆசைப்பட்டேன்.
தோள் கொடுத்து என் நட்பு காப்பாய் என நினைத்தேன்
தேள் கொட்டியது போல உன் மாற்றம்,
எனக்குள் மிகப்பெரிய ஏமாற்றம்....
காணாமல் நான் போகாமல் கரம் பிடிப்பாய் என எண்ணினேன்
ஏற்காமல் பிரிந்து போகிறேன் என்றாயே,
இருளினுள் தவிக்கவிட்டு சென்றாயே....
என் விழியாகி வழி நடத்துவாய் என கருத
உன் விழியை வேறு வழியில் மாற்றினாய்
என் எண்ணத்தை வேரோடு சாய்த்தாய்....
கணமும் அகலாமல் நாம் நட்போடு பழக நினைத்தது
கனத்தை என் நெஞ்சில் ஏற்றியது
என்னை இன்னொடியிளிருந்தே வாட்டியது....
உன் சொல் எல்லாவற்றையும் தூண்டியது
என் மனமும் அதற்கு இசைத்தது
கூரிய அம்பு போல அச்சொல் இரனமாக்கியது,
என்னை நிலைகுலைத்தது,
இன்னமும் மீளமுடியவில்லை....
கூடிய சீக்கிரம் பிணமாக்குமோ என்ற ஐயம்
மட்டும் தாங்கி நிற்கிறேன்.........!
மனதால் வீழ்வேனோ நான்........!
அல்லது வீழ்த்தியது நீயா.........!
காலத்தின் கையில் பதில்.
nalla pathilaaaka varattum ...
ReplyDeleteமிகவும் அருமை....
ReplyDelete