இன்றைய குறள்

Monday, October 21, 2013

ரசனை


இயற்கையே,
கற்றுக்கொள்ள உன்னிடத்தில்
நிறைய இருக்கிறது.
மாணவனாய் நான் மாறும் முன்
இரசிகனாய் மாறிவிட்டேன்.

இரண்டே கண்கள் போதவில்லை!!

துடித்தேன்,
புலம்பினேன்,
விசும்பினேன்,
விம்மினேன்,
அழுதேன்,
செய்வதறியாது திகைத்தேன்,
சிந்தித்தேன்,
அகக்கண்களை திறந்தேன்.

என்னுள் நீ எனையறியாமல்
ஊடுருவினாய்.

நீ கற்றுக்கொடுத்து ஆசிரியரானாய்.
உன்னை என்னுள் அடக்கி நான்
சீடனானேன்.

இயற்கையே நீ காத்திரு
ஒரு நாளில் உனை அடைவேன் நான்.

2 comments:

  1. அருமை... அனைத்தும் கற்றுக் கொடுக்கும் இயற்கை வள்ளல்...

    ReplyDelete

பழமொழி