ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்
அம்மாவை மாற்ற தேவையில்லை
ஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்
ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.
காலை வணக்கம் வார்த்தை எல்லாம்
கடல் கடந்து சென்றது
Good Morning என்ற வார்த்தையில் தான்
பல குடும்பம் விழிக்குது.
Fu*k என்ற வார்த்தை கூட
பெருமை பொங்க சொல்வர்..
நாங்கள் ஓ... என்று ஆரம்பித்தால் மட்டும்
ஒழுக்கம் இல்லாதவர் என்பர்.
அந்நிய உணவில் தனி ருசிதான்
அதில் ஒன்றும் தவறில்லை
ஆயின் வறண்ட ரொட்டியை
திண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?
பத்து வரியை படிக்க சொன்னால்
பல்லை இளித்து காட்டுவார்
ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கி
வைத்து அறிவாளி வேடம் போடுவார்.
முறுக்கும் சீடையும் கையில் தந்தால்
அலட்சியம் செய்து போவார்.
ஒரு Kurkure'வை வாங்கி கொண்டு
கோமான் போல திரிவார்..
நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்
அலப்பறை அதிகமாய் மின்னும்
நாலு வரி பேச தெரிந்துவிட்டால்
மனதில் சேக்சுபியர் என்று எண்ணம்.
பாரதி கவிதை பைந்தமிழ் நூலை
புரியாதவர் போல படிப்பார்..
Harry Potterஐ வாங்கி வைத்து
மேதாவி போல நடிப்பார்..
நண்பா தோழா என்பதை
பழமை சாயம் பூசுவார்
Bro Dude என்பதை எல்லாம்
புரியாமலே பேசுவார்
அன்பெனும் அம்மா
Mummy ஆனது
அழகிய தமிழ்மொழி
Dummyஆனது
ஆங்கிலம் என்பது
பெருமையானது.
நீங்கள் அலட்டிக்கொள்வது
மடமையானது.
அரசியலில் தான் விடுதலை பெற்றோம்
நம் அடிமை தனம் இன்னும் போகவில்லை
வளர்ச்சிக்கு தான் ஆங்கிலம்
அதை கவர்ச்சியாய் காட்டத் தேவையில்லை.
பெருமைக்கு பேசுவதை
குறைத்து கொள்ளுங்கள்
நம் பெருமை எல்லாம்
தமிழ்தான் உரைத்து சொல்லுங்கள் .
-வை . நடராஜன
இதை சொன்னால் தமிழ் என்பது ஆங்கிலத்தை போல ஒரு மொழி தான்.
மொழி என்பது பரிமாற்றத்திற்கான ஒரு ஊடகம் என்று மேதாவிகளிடம் இருந்து பதில் வருகிறது. டேய் “முட்டாபயலே”, இது உன் தாய் மொழிடா. இதை கற்பதில், பேசுவதில் என்னடா கௌரவ குறைச்சல் இருக்கு என்றால், எனக்கு எது எளிதாக வருகிறதோ அதை செய்கிறேன். இது ஒன்றும் கட்டாயம் இல்லையே என்கிறான்.
பிறகு எதற்குடா தமிழ் கடவுளான முருகனை கும்பிடுகிறாய் என்று கேட்டால் அது சாமி என்கிறான்.
மேலும் ஒரு அருமையான படைப்பு தமிழிற்காக. படைப்பாளிக்கு எனது வணக்கங்கள்(அவர் யாரென்று தெரியாது).
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....
ஏன் டா ஆங்கிலம் தானே உனக்கு சோறு போடுது என்பார்கள் சில மேதாவிகள், அதற்கு பதில்
தமிழ் எனக்கு
உயிர் தந்தது,
உறவு தந்தது,
பாசம் தந்தது,
பரிவு தந்தது,
அன்பு தந்தது,
காதல் தந்தது,
படிப்பு தந்தது,
அறிவு தந்தது,
வீரம் தந்தது,
நியாயம் தந்தது,
பண்பு தந்தது,
கோபம் தந்தது,
நல்லொழுக்கம் தந்தது,
இன்னமும் நிறைய தந்துள்ளது,
இப்படி இருக்கும் என் மொழியை நான் நேசிக்காமல் உலகத்தில் வேற்று மொழிக்காரனா யோசிக்கபோகிறான்.
அன்பு தமிழர்களே, எல்லா தமிழர்களுக்கும் பரப்புங்கள்.
மிகச்சரியான வாதமே! அந்த ஆங்கிலத்தையும் தந்தது தமிழ் என சொல்வேன். நான் தமிழ் வழி கல்வி படித்ததால், நிறைய ஆங்கில வார்த்தை உச்சரிப்பை தமிழில் எழுதி பழகி படித்தவள்
ReplyDeleteநல்ல கருத்தான பதிவு.
ReplyDeleteபாராட்டுகள்.
annna supe nalla thagaval arumai pathinthu irukingegal
ReplyDeleteஉண்மை நண்பா , உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்...
ReplyDeleteஅன்னிய நாட்டு மதங்களை சிலர் ஏற்றுக்கொள்ளுவறு போல் சிலர் அன்னிய மொழியை ஏற்று கொள்கிறார்கள், அது சரியென்றால் இது எப்படி தவறாகும்,
ReplyDeleteமதம் தோன்றுவதற்கு முன்பே நமது மொழி தோன்றிவிட்டது. ஆதலால் மொழிக்கு தான் முக்கியத்துவம். தமிழகத்தில் எம்மத்தினரும் தமிழ் பேசலாமே. அதற்கு தடையேதுமில்லையே!!!
ReplyDeleteஅருமையான பதிவு. ஆங்கில வழியில் கற்றவர்களை விட தாய் மொழியில் கற்றவர்கள் தான் அதிகம் சாதித்திருக்கிறார்கள்.
ReplyDeleteArumai arumai
ReplyDelete