இன்றைய குறள்

Thursday, June 6, 2013

அனைத்தையும் இழப்பேன் உனக்காக அன்னையே..............



கடல் தாண்டி வந்தேன்
பொருள் சேர்க்க விரைந்தேன்
பெற்றோரை பார்க்காமல் தவித்தேன்
அவர்கள் கண்முன் இல்லாமல் அழுதேன்

கண்ணீரின் கேள்வி இதுவே
தனிமையில் ஏது வாழ்வே?

நண்பனின் குரலை மறந்தேன்,
அவன் பெயரை நாளும் நினைத்தேன்....
சொந்தங்களின் உருவம் மனதில்,
பணத்தால் தொலைத்தேன் இளவயதில்....

நாடு இருக்கும் திசை நோக்கியே
கணத்த மனதோடு
சோக முகத்தோடு
வாடிய உள்ளத்தோடு
கலங்கிய கண்ணோடு
நின்றிருந்தேன்.....

பணத்தை திட்டிக்கொண்டு
தொலைத்த இளமையை எண்ணிக்கொண்டு
புதிதாய் வாங்கிய அலைபேசியோடு
அம்மாவின் குரல் கேட்க்கும்
ஆவலோடு
அழைப்பு கொடுத்தேன்.

என்னுடைய இந்த வயதிலும்
அன்னையின் குரல்
தாலாட்டாய் என்னை
மகிழ்விக்கும் பொழுது
இழந்ததை பற்றிய
எண்ணம் காற்றோடு கரைந்தே போனது.............................

4 comments:

பழமொழி