ரியல் மாட்ரிட்
மற்றும் போருசியா டார்ட்மண்ட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சுற்று அரையிறுதி
போட்டி ரியல்மாட்ரிட் ஆடுகளத்தில் தமிழக நேரம் இன்று may-1-2013 நள்ளிரவு 00:15 மணிக்கு துவங்கியது. சென்ற வாரம் 4-1 என்ற இலக்கு கணக்கில் போருசியா டார்ட்மண்ட் வெற்றி பெற்றதால் இம்முறை
எப்படியாவது 3-0 எம்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறிவிடவேண்டும் என்ற
முனைப்போடு ரியல் மாட்ரிட் அணி துவங்கியது.
ஆட்டத்தின் 7வது நிமிடத்தில் காப்பாளர் கட்டத்தினுள் மிதந்து வந்த பந்தை நெஞ்சில் மீது
வாங்கி, பின்னோக்கி கவிழ்ந்து இலக்கினுள் அடித்தார் ரொனால்டோ. ஆனால் டார்ட்மண்ட்
காப்பாளர் அருமையாக தடுத்தார்.
ஆட்டத்தில் 10வது
நிமிடத்தில் தனக்கு வழங்கப்பட்ட பந்துடன் காப்பாளர் கட்டத்தினுள் நுழைந்து இலக்கு
அடிக்க முனைந்தார் ஹிகுஅயின். ஆனால் டார்ட்மண்டின் காப்பாளர் மிக மிக அருமையாக
தடுத்தார்.
15வது
நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரோனல்டோவுக்கு அருமையான வாய்ப்பு கிடைத்தது.
இலக்கிற்கு மிக அருகில். ஆனால் அவர் உதித்த பந்து இலக்கினுள் நுழையாமல் வெளியே
பறந்து சென்றது.
எப்படியாவது போராடி
மூன்று இலக்குகள் அடித்தால் 4-4
(முதல் சுற்று 1-3) என்ற கணக்கில் வந்து எதிரணி களத்தில் ஒரு இலக்கு அடித்த காரணத்திற்காக
இறுதி போட்டியினுள் நுழையலாம் என்ற எண்ணத்தோடு சிறப்பான முறையில் ரியல் மாட்ரிட்
அணி விளையாடிகொண்டிருந்தது. ஆனால் அவர்களுடைய முயற்சிகளை டார்ட்மண்ட் தடுப்புகள்
வீரர்கள் தடுத்துக்கொண்டே இருந்தார்கள். மாட்ரிட் வீரர்கள் பந்தை எடுத்துக்கொண்டு
முன்னேறி போவதும் பின் பந்தை டார்ட்மண்ட் வீரர்களிடம் இழப்பதுமாக ஆட்டம் 24 நிமிடங்கள் முடிந்திருந்தது. மிக விறுவிறுப்பாக விளையாடினார்கள் என்றே
சொல்லவேண்டும்.
இந்த நேரத்தில் பந்தை
மிக நேர்த்தியாக இடது பக்கத்தில் ரியல் மாட்ரிட் அணியின் ஓஸில் எடுத்துவந்து
காப்பாளர் கட்டத்தினுள் வழங்கினார். பந்து டிமரியாவிடம் சென்று அவர் இலக்கினுள்
அடிக்க முயலும் பொழுது பந்து தன் அணியின் ஹிக்குயன் காலிலேயே பட்டு சென்றது.
சற்று தாமதமாக
மாட்ரிட் அணியின் கோன்றாவ் டார்ட்,மண்ட் வீரர்
ஹாவர்ட் வெபிடம் போராடிய செயலுக்காக மஞ்சள் அட்டை வழப்பட்டது. டார்ட்மண்ட்
வீரர்களும் அவ்வப்பொழுது பந்தை மாட்ரிட்டின் காப்பாளர் கட்டத்தினுள்
எடுத்துச்சென்று அவர்களை மிரட்டினார்கள். ஆட்டம் மிகுந்த பரபரப்போடு இருந்ததால் 30 நிமிடங்கள் கடந்ததே தெரியவில்லை.
31வது
நிமிடத்தில் டார்ட்மண்ட் அணியினருக்கு கார்னர் கிக் கிடைத்தது. ஆனால் அதை மாட்ரிட்
அணியினர் சிறப்பாக முறியடித்தனர். ஆட்டத்தின் 40வது நிமிடத்தில் களத்தின்
இடது பக்கத்தில் இருந்து ஹிகுஅயின் அடித்த பந்தை ரொனால்டோ தலையில் தட்டி
இலக்கினுள் அடிக்க முயன்ற பொழுது காப்பாளர் வேயன்டென்பில்ளீர் முன்னேறி பந்து
பிடித்தார்.
42வது
நிமிடத்தில் ஓஸிளை கீழே இடறி வீழச்செய்த ஹோண்டகனுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது, மேலும்
சற்று தாமதமாக நடுவரிடம் வாதாடியதால் ஹிக்குயனுக்கும் மஞ்சள் அட்டை. 40 யார்டில்
ப்ரீ கிக்கின் மூலம் கிடைத்த பந்தை ரொனால்டோ இலக்கை நோக்கி உதைத்தார். ஆனால் அது
சற்று அகலாமாகவும் சற்றே உயரமாகவும் வெளியே சென்றது.
முதல் பாதி
முடிவடையும் நேரத்தில் டார்ட்மண்ட் வீரர்களின் முயற்சியை மாட்ரிட் காப்பாளர்
முன்னேறி வந்து தடுத்தார். இந்த முயற்சியோடு முதல் பாதி பரபரப்போடு நிறைவடைந்தது.
மாட்ரிட் அணியின் நிறைய முயற்சிகளை டார்ட்மண்ட் அணியினர் தகர்த்தனர்.
ஆட்டத்தின் 46வது நிமிடத்தில் இடம் வலம் இருபக்கத்தில் கிடைத்த கார்னர் கிக் மூலம்
கிடைத்த பந்தை இலக்கினுள் அடிக்கமுடியவில்லை ரியல் மாட்ரிட் அணியினரால். பின்னர் டார்த்மன்டின்
வீரர் லேவண்டோவாஸ்கி அவருக்கு கிடைத்த பந்தை இலக்கினுள் அடிக்க தவறினார். அடுத்த
நிமிடத்தில் மேலும் ஒரு அருமையான வாய்ப்பு லேவண்டோவாஸ்கிக்கு. அதை அவர் இலக்கினுள்
அடிக்க அது இலக்கின் மேல் கம்பியின் உட்ப்புரம் அடித்து வெளியாகியது. இந்த முயற்சி
ஆட்டத்தின் சிறந்த முயற்சி. இதை இலக்கினுள் அடித்திருந்தால் கண்டிப்பாக
டார்ட்மண்ட் அணி இறுதி போட்டியினுள் நுழைந்திருக்கும்.
டார்ட்மண்ட் அணியினர்
தடுப்பாட்டம் ஆடாமல் அவர்களும் இலக்கு அடிக்கும் முயற்சியில் இருந்தார்கள். சிறிது
நேரம் கழித்து பென்சமா மற்றும் கக்கா, ஹிக்குயன் மற்றும் கோன்றாவிற்காக முறையே
மாற்று வீரர்களாக களம் இறங்கினர்.
61வது நிமிடத்தில் வலது
பக்கத்திலிருந்து நுழைந்த டார்ட்மண்ட் அணிவீரர் ரேயுஸ் வழங்கிய குண்டகான் பந்தை
இலக்கினுள் அடித்தார். ஆனால் காப்பாளர் லோபஸ் அருமையானக தடுத்தார்.
அடுத்த இரண்டாவது நிமிடத்தில் டார்த்மண்ட் வலது பக்கத்தில் இருந்து மிதந்து
வந்த பந்தை லேவண்டோவாஸ்கி தலையால் முட்டி இலக்கினுள் அடிக்க முயற்சி செய்தார்,
ஆனால் வலது பக்கவாட்டில் அது வெளியே சென்றது.
கக்கா மிகச்சிறப்பான முறையில் பந்தை
ரொனால்டோவிற்கு வழங்க அவர் அட்ஜோ டிமரியாவிடம் வழங்க, அவர் அதை இலக்கினுள் அடிக்க
முயற்சி செய்தாரா அல்லது பென்சமாவிடம் வழங்கினாரா என்று தெரியவில்லை. அந்த
வாய்ப்பு நழுவியது.
அடுத்த இரண்டு நிமிடத்தில் ரொனால்டோவிற்கு
அருமையான வாய்ப்பு. இலக்கிற்கு நேரே கிடைத்து அதை இலக்கிற்கு வெளியே அடித்தார்.
அடுத்த நிமிடத்தில் இலக்கிற்கு இடது பக்கத்தில்
இருந்து வழங்ககப்பட்ட பந்தை கக்கா வெளியே அடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் இழந்து
வந்தனர் ரியல் மாட்ரிட் அணியினர். ஆட்டத்தின் கடைசி 15 நிமிடங்களில் ரியல் மாட்ரிட் அணியினர் 3 இலக்குகள் அடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.
ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்கள் மிகவும் விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருந்தது. 3 இலக்குகள் அடித்தே
ஆகவேண்டும் என்ற கட்டாயம் ரியல் மாட்ரிட் அணியினருக்கு. இந்நேரத்தில் அவர்களுடைய
தவறான ஆட்டத்தினால் மஞ்சள் அட்டை ராமோஸ் மற்றும் கெதெறாவுக்கு வழங்கப்பட்டது.
ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணியினர் பென்சமா மூலம் ஒரு
இலக்கு அடித்தனர். கக்கா வலது பக்கத்தில் வந்த ஓசிளிடம் பந்தை வழங்க அவர்
இலக்கிற்கு அருகே அடிக்க அங்கிருந்த பென்சமா இலக்கினுள் அடித்தார். இதன் மூலம்
ஆட்டத்தில் 1-0 (2-4) என்ற கணக்கிற்கு வந்தது ரியல் மாட்ரிட் அணி. ரியல் மாட்ரிட்
அணியினர் இலக்கு அடிக்கும் முனைப்புடன் மிக மிக அற்புதமாக ஆடினார். பந்தை
டார்ட்மண்ட் அணியினருக்கு கொடுக்காமல் தங்களிடமே வைத்திருந்தனர். ஆட்டத்தின் கடைசி
5 நிமிடங்கள். லேவண்டோவாஸ்கிக்கு மாற்று வீரராக
இந்நேரத்தில் இடது பக்கத்திலிருந்து கார்னர்
கிக் கிடைத்தது ரியல் மாட்ரிட் அணிக்கு. அதில் இலக்குள் அடித்தார். ஆனால்
டார்ட்மண்ட் காப்பாளர் தடுத்துவிட்டார். ஆட்டத்தின் கடைசி இரண்டு நிமிடத்த்தில்
தனக்கு கிடைத்த பந்தை ராமோஸ் சிறப்பான முறையில் இலக்கினுள் அடித்தார். இதன் மூலம் 2-0 (3-4) என்ற கணக்கில் இருந்தது ரியல் மாட்ரிட். மிக மிக விறுவிறுப்பான கடைசி 10 நிமிடங்கள் என்றே சொல்லவேண்டும். புயல் போல விளையாடினார்கள் ரியல் மாட்ரிட்
அணியினர். ரியல் மாட்ரிட் காப்பாளர் லோபஸ் தவிர அணைத்து வீரர்களும் டார்ட்மண்ட்
பக்கம் தான் இருந்தனர்.
இன்னமும் ஒரு இலக்கு அடித்தால் இறுதி
போட்டியினுள் நுழைந்து விடும் ரியல் மாட்ரிட் அணி. எப்படியும் நுழைய வேண்டும் என்ற
முனைப்பு அந்த அணி வீரர்களிடம் இருந்தது. மிக மிக சிறப்பான ஆட்டத்தினை
வெளிப்படுத்தினார்கள். 90நிமிடங்கள் தாண்டி ஆட்டம் சென்று கொண்டிருந்தது. 5 நிமிடங்கள் அதிகமாக
வழங்கப்பட்டிருந்தது. மிகவும் பதட்டமான நிமிடங்கள் இவை. இந்நேரத்தில் மாட்ரிட்
அணியினருக்கு கார்னர் கிக் கிடைத்தது. காப்பாளர்
லோபசும் வந்துவிட்டார் டார்ட்மண்ட் இலக்கினுள். ஆனால் இலக்கிற்கு வெளியே
அடிக்கப்பட்டது. ஆட்டம் முடிவடைந்தது. மிக மிக அருமையான, பரபரப்பான ஆட்டம்.
டார்த்மண்ட் அணி 4-3 என்ற இலக்கு எண்ணிக்கையில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இறுதி
போட்டியினுள் நுழைந்தது.
எழுத்துப்பிழை இருந்தால் மன்னிக்கவும். ஆட்டம்
பார்த்துக்கொண்டே வேகமாக தட்டச்சி செய்து, சரி பார்க்க நேரமில்லாமல் பதித்தது.
No comments:
Post a Comment