படம்: தங்கமீன்கள்
பாடல்: நதி வெள்ளம்
பாடியவர்: ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை.........
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
அடி என் கண்ணின் இரு கருவிழிகள்,
உன் முகத்தை தேடுதடி!
கண்ணீர் துளிகள் காட்சியை மறைக்குதடி!
என் காட்டில் ஒரு மழை வந்தும்,
மகரந்த ஈரங்கள் காயும் முன்னே,
இடி மின்னல் வந்து காடே எறிந்ததடி!
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
அலைந்திடும் மேகம் அதை போல இந்த வாழ்க்கையே,
காற்றின் வழியில் போகின்றோம்!
கலைந்திடும் கோலம் என்ற போதிலும் அதிகாலையில்,
வாசலில் வண்ணம் விதைக்கின்றோம்!
உயிரே உன்னை பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே… எந்தன் உயிரே!
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
மலர் ஒன்று வீழ்ந்தால் அதை ஏந்த பலர் ஓடுவார்
இலைகள் வீழ்ந்தால் சருகாகும்!
வறியவன் வாழ்க்கை, இலை போல என்ற போதிலும்
சருககுகள் ஒரு நாள் உரமாகும்
உயிரே உன்னை பிரிந்தேன்
உடனே நானும் இறந்தேன்
உடல் தான் அங்கு வாழும்
நீதானே… எந்தன் உயிரே!
நதி வெள்ளம் மேலே என் மீனே மீனே
நீ நீந்திய பொன் நினைவுகள் நெஞ்சில் நிழலாடும்
முன் அந்தி நிலவில் என் மானே மானே
நீ ஓடிய மென் சுவடுகள் மீண்டும் உனை கேட்கும்
No comments:
Post a Comment