படம்: கடல்
இசை: எ. ஆர். ரஹ்மான்
பாடல்: நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்
பாடல் வரிகள்: வைரமுத்து
பாடியவர்: சத்தியஸ்ரீ கோபாலன்
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத
மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆணை புலி
எல்லாம் அடக்கும் உன் அதிகாரம்
நீர் போன
பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே
நிழல் வீழ்ந்துடுச்சி
அப்பா நிமித்தவ
தான்
அப்புறமா
குனியலையே குனியலையே
கொடக்கம்பி போல
மனம் குத்தி நிக்குதே
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
பச்சி
ஒறங்கிருச்சு பால்தயிராத் தூங்கிருச்சு!
இச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு!
இச்சி மரத்து மேல எல கூடத் தூங்கிருச்சு!
காச நோய்க்
காரிகளும் கண்ணுறங்கும் வேளையில,
ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலையே!
ஆசநோய் வந்தமக அரை நிமிசம் தூங்கலையே!
நெஞ்சுக்குள்ள உம்ம முடிஞ்சிருக்கேன்!-
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
இங்க எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ?
ஒரு வாய்
எறங்கலையே உள்நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே!
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே!
ஏழை
இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே!
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லையே!
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ
வெள்ளை பார்வை
வீசிவிட்டீர் முன்னாடி
இதத் தாங்காத
மனசு தண்ணி பட்ட கண்ணாடி
வண்ண மணியாரம்
வலதுகை கெடியாரம்
ஆணை புலி
எல்லாம் அடக்கும் உன் அதிகாரம்
நீர் போன
பின்னும் நிழல் மட்டும் போகலையே போகலையே
நெஞ்சு குழியிலே
நிழல் வீழ்ந்துடுச்சி
அப்பா நிமித்தவ
தான்,
அப்புறமா
குனியலையே குனியலையே!
கொடக்கம்பி போல
மனம் குத்தி நிக்குதே!
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்
நெஞ்சுக்குள்ளே
உம்ம முடிஞ்சிருக்கேன்,
இங்க
எத்திசையில் எம்பொழப்பு விடிஞ்சிருக்கோ!
semma
ReplyDeletewhats mean of ரப்பர் வளவி?
ReplyDeletebangles...
Deletebangles which made up of rubber and never makes any sound
Delete