தமிழன் வரலாறு history
தமிழ் வரலாறு
மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .
(((இதை படிக்க 5து நிமிடம் ஒதுக்குங்கள்)))
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கரை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன் "அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே!
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
நன்றி !
இவரால்: தமிழ்.களம் Thamil.Kalam
பயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteஅருமை.
தொடர்ந்து வழங்குக.
நன்றி தோழரே
Deleteஅறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...
ReplyDeleteபகிர்கிறேன்... நன்றி...
நன்றி தோழரே
DeleteHi Karthik,
ReplyDeleteVery good information. Can you please provide
information on the source of information for
the old Tamil Sangam meetings ?. Like how you
were able to get the year, number of poets who
attended them etc., ?.
Sudharsan
jupper anna
ReplyDelete