வெடிசத்தத்தில்
மறைந்த
பிஞ்சுகளின்
மௌன அவலம்,
சிவகாசியில் அரங்கேற்றம்..............
============================
மத்தாப்பூக்களின்
சிதறல்களில்
ஒளியிழந்த
சிசுக்கள்
பாடசாலை மறந்து
கந்தக தொழிற்சாலையில்
============================
கண்கவர்
வானவேடிக்கை வானில்.
செய்தவரின்
வாழ்க்கை
வேடிக்கையாக மாறும்
கொடுமை
சிவகாசியில்
============================
வந்தேறிகள் மட்டுமில்லை
அவர்களின் பண்டிகையும்
தமிழர்களின்
உயிரை
காவு கேட்கிறது
தீபாவளி ஊடாக
============================
உழைப்பிற்கு கூலி
கொடுத்து
ஊக்கப்படியாக
உயிர் காவு
கேட்கிறது
கேட்டால் தீபஒளி திருநாளாம்!!!!!!!
arumai anna
ReplyDeleteஅப்படி கேளுங்க... அருமை...
ReplyDelete