இரவில், உலகமே மகிழ்ச்சி கடலில் திளைக்க
எங்கள்
தமிழகம் மட்டும் பல ஆண்டுகள்
பின்னோக்கி
இருளில் தவிக்கிறது.
படிக்கும் மாணவர்கள் கல்வியை
தொலைக்கின்றார்கள், எப்படி வளர்வது
தொழிற்ச்சாலைகள் உற்பத்தியை
குறைக்கிறது, எங்கே பொருளாதாரம்
இருள் சூழ்ந்த சாலைகளில்
சமூக விரோதிகள் நடத்தும்
குற்றங்கள்.
இரண்டு மணி நேர
நகரத்து மின்வெட்டு,
இருபத்தைந்து மணி நேர
கிராமப்புற மின்வெட்டு.
தவித்த எங்கள் மக்கள்,
கனவிலும் மின்சாரம் வருவதில்லை
என்று புலம்பியபடி போகின்றார்கள்,
கொசுக்கடியில்
தூக்கத்தை தொலைத்தவர்கள்.
தூக்கத்தில் தானே கனவு காணமுடியும்!
தூங்குவோமா என்ற சிந்தனையே
மேலோங்கி நிற்கிறது!
இதில் எங்கே வரும் கனவு?
கடந்த ஆட்சி நல்லவைகள்
கிடப்பில் இருக்கிறது.
மின்சார மந்திரி யாரென்று
தெரிந்து திட்டியதை,
இந்த முறை தெரியாமல்
செய்கின்றார்கள் மக்கள்.
ஆனால்,
கடந்த ஆட்சி வித்திட்டத்தை,
இந்த ஆட்சி
நீரூற்றி,
உரமூட்டி,
களைப்பிடிங்கி பராமரிக்கிறது,
மின்வெட்டு அதிகரிப்பு.
இதற்கு அறுவடை
நிச்சயம் சிறப்பாக இருக்கும்
தேர்தல் முடிவிலே!!
இப்போது 18 Hours
ReplyDelete