துடுப்பாக
நானே துழாவ
படகாக
நானே மிதக்க, படகு சவாரி போக்குவரத்து
ஊஞ்சலாக
தொங்கி மகிழ்ச்சி ஆடல் என் மேல்
கதவாக
மூடி நான் காக்க
சன்னலாக
தென்றலை உள்ளே அழைத்து வர
மேசையாக
வைத்து எழுத
நாற்காலியாக
உட்கார்ந்து கொள்ள
நடைவண்டியாக
நடக்க பழக
குடிலாக
தங்கி வாழ
படுக்கையாக
மேல் ஓய்வு
நான்
மாறிய தியாகம்
மீண்டும்
என்னை வளர்த்தெடுக்க
மனிதனுக்கு
ஏனோ இல்லை நெஞ்சம்
நிழலுக்கு
அவன் மீண்டும் என்னிடமே தஞ்சம்
அவனுக்காக
நான் என்றும் நிற்கிறேன்
என்னை
வெட்டி சாய்த்து
அவன்
வாழ்கிறான்
நான்
சாகிறேன்.
இப்படிக்கு
பசுமை
போர்வை போற்றிய
தியாகி
மரம்
nalla kavithai..
ReplyDeleteநல்ல வரிகள் நண்பரே... அருமை...
ReplyDelete