கல்லடி காயங்கள் மறக்கலாம்
சொல்லடி ரணங்கள் காலம்
முழுதும்
மறையா வடுவாகும்.
கண்ட அநுபவங்கள் மிகுதி,
சொன்னவர்களுக்கு இல்லை தகுதி.
விடிந்த பிறகு
கூவும் சேவலாக இருக்காதே.
சேவல் குரலுக்காகவும் காத்திராதே
காலம் கடந்துவிடும்.
உன்னையே கேட்டுப்பார்.
தன்னிச்சையாக விழித்துக்கொள்.
உன் மனக்குமுறளின் அக்னி
சுடர்களை
சிறகுகளாக பறக்கவிடு.
வழியில் ஒளியாக
அக்னி சிறகுகள் வழிகாட்டட்டும்.
சுதந்திர வானம் மட்டுமல்ல,
காலமும் உனக்காக
எதிர்பார்த்து காத்திருக்கிறது.
arumai!
ReplyDeletearumai!
/// உன்னையே கேட்டுப்பார்.
ReplyDeleteதன்னிச்சையாக விழித்துக்கொள். ///
அருமை வரிகள்...