இன்றைய குறள்

Tuesday, October 23, 2012

இந்த வான் வெளி விடியாதோ பாடல் வரிகள்

படம்: ஆரோகணம்
பாடல்:  இந்த வான் வெளி
பாடியவர்: ஆனந்த் ஸ்ரீநிவாசன்



இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ 

இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ

புரிஞ்சிக்க தான் பார்த்தேன்
உன் புதிர்காலம் தீராதா 
கால் போக்குல தொலைந்தேன்
நம் எதிர்காலம் மாறாதா 
இயற்பியலும் அறிவே
உன் இயல்பே அறிவே

இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ 

கடல் அது ஆழம்,
அதில் வாழும்  கயலுக்கு தெரியும்
எது வரும் போதும்,
எனது உள்ளம் உன் வழி அறியும்
இதமாய் மனதில் வண்ணம் வரையும்
உருவம் இருந்தால் நாட்கள் நிறையும்
கதிரொளி கொண்டு முகம் காட்டும்
நிலவினை போலே
உனது உருவ பிம்மம் தினம் தோன்றும்
எனது உயிர் மேலே
என்னில் நான் உனையே காணல் எளிது
இருந்தும் இனிமை பாரம் பெரிது  
நிழல் தானே இங்கே
நிஜம் எல்லாம் அங்கே

இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ 

இந்த வான் வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ 

புரிஞ்சிக்க தான் பார்த்தேன்
உன் புதிர்காலம் தீராதா
கால் போக்குல தொலைந்தேன்
நம் எதிர்காலம் மாறாதா 
இயற்பியலும் அறிவே
உன் இயல்பே அறிவே

இந்த வான்வெளி விடியாதோ
எந்தன் தாய் மொழி விளங்காதோ

1 comment:

பழமொழி