உன்னை நான் பிரியக்கூடாதென்று வேண்டினேன்,
நீ இல்லாத பொழுதினில் தனித்து வாடினேன்,
உன்னை என் விழி காணாமல் துடித்தேன்,
ஏன் உனை தொலைத்தேன்
என்று மனதினுள் வெம்பினேன்
இங்கும் அங்கும் ஓடி உனை தேடினேன்.
நீ என்னிடம்
மனம்கசந்து
மறந்து
பிரிந்து
அகன்றாயோ
என்ற சோகம்
என்னுள் உதித்தது.
உனக்கென்ன கல்மனமோ
என்ற எண்ணத்தோடு
தேடி அலைந்து
கண்டேன்.
நீ என்னை பிரியவில்லை,
நானே!
உன்னை மட்டும்மல்ல,
உலகையும் பிரிந்தேன்.
இன்று உன் அருகில் நான்.
ஆனால் நீயோ
உலகை வெறுத்து
சோகமாக
என் நினைவுகளை சுமந்தபடி...........
வேதனை தரும் வரிகள்...
ReplyDeleteஉணர்வுகளை உணர்த்திடும் உன்னத வரிகள்
ReplyDelete