இன்றைய குறள்

Friday, September 21, 2012

வளையல் கரங்களை பார்க்கிறேன்

படம்: தொட்டால் பூ மலரும்
பாடல்: வளையல் கரங்களை
இசை: யுவன் ஷங்கர் ராஜா

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா
தொட்டாலே தொட்டாலே பூ தான் மலரும் 
தொடாமல் பூத்த பூவே
சுட்டாலே சுட்டாலே பொன் தான் மின்னும்
சுடாமல் மின்னும் பொன்னே
கண்ணே உன் கண்ணே உன் கண்ணில் யாரு
காதோடு கூறு மானே
கைகூடும் கைகூடும் எண்ணம் யாவும்
கல்யாண நாளில் தானே

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா

ஓ... ஒவ்வொரு கையிலும் வண்ணகோலங்கள் வரைந்தவன்
வீட்டிலே வாழ்பவர் நெஞ்சம்யாவிலும் நிறைந்தவன் 
குடும்பத்தில் நானும் இன்று ஒருவன்
குயிலேன பாடுகின்ற சிறுவன்
அனைவருக்கும் எனை பிடிக்கும்
பிரிவுகள் எந்த நாளும் வாராது
இடிமின்னல் தாக்கும் போதும் கூட
பிளவுகள் என்றும் வானில் நேராது
நீயில்லாமல் நானேது
இந்நாளும் எந்நாளும் உன்னை பாட
இங்கேயே தென்றல் உண்டு
உன்னோடு உன்னோடு சேரும் எந்தன்
அன்பான கண்கள் இரண்டு

ஓ... நங்கையே நானொரு நாடி ஜோசியம் தெரிந்தவன் 
யார் மனம் யார் வசம் பூர்வ ஜாதகம் புரிந்தவன்
அரும்பிய ஆசை பூத்து காய்க்கும்
அதற்கொரு வேலை வந்து வாய்க்கும்
தமிழ் அறிந்த இசைக்கலைஞன் 
எனது சொல் எந்த நாளும் தோற்காது
விரும்பிய கைகள் சூடும் மாலை
விழுந்திடும் வஞ்சி உன் தோள் மீது
வா உன் வாழ்வு உன் கையில்
செவ்வந்தி செவ்வந்தி பூவே நீ தான்
சந்தோசம் காண வேண்டும்
செந்தூர செந்தூர கன்னம் பார்த்து
செவ்வானம் நாண வேண்டும்

வளையல் கரங்களை பார்க்கிறேன்
வியந்து வியக்கிறேன் 
அழகுக்கு அழகு சேர்க்கிறேன்
விரல்கள் பட பட சிலிர்த்ததா
கனவு துளிர்ததா
விழிகள் சிவந்து போனதா

1 comment:

  1. வரிகளுக்கு நன்றி... (முந்தைய இரு பதிவுகளுக்கும்)

    ReplyDelete

பழமொழி