இன்றைய குறள்

Thursday, August 9, 2012

முடிவில் தொடர்ந்து

மௌன உணர்வின்
வெளிப்பாட்டில்
கண்கள் பாடும்
சோக கீதம்,
மனதில் நீங்கா
மணியோசை.


மணியோசை
கேட்டு எழுந்தேன்
ஆனால் ஓசையாக
என்னை உசுப்பியது
உன்னை பற்றிய
எண்ணம்.


எண்ணத்தில் உன்னை
வைத்தேன்
வர்ணமாக மாறியது
வாழ்க்கை.


வாழ்க்கை பாதை
முழுவதும்
மலர் படுக்கை
விரித்தது உன்
ஞாபக நினைவுகள்.


என் நினைவுகளில்
நீங்காது
இருப்பது
நாம் பிரிந்த கணமே
அதிலிருந்த
உன் மௌனம்.

மௌனம் (மீண்டும் தொடக்கத்திலிருந்து)

No comments:

Post a Comment

பழமொழி