இன்றைய குறள்

Saturday, August 18, 2012

மறத்தல் மன்னித்தல்




உன்னை
மறக்க நினைத்து
மரிக்க முயன்றேன், முடியவில்லை.
மரணமும்
மறித்து
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்டது.

========================
அரசியல்வாதிகளின்
ஐந்தாண்டு மறதியை
மக்கள்
மன்னித்து (மறந்து)
மக்களவைக்கு அனுப்புகின்றனர்

========================
எனக்கு மறதி
என்பது வெறும்சொல்லல்ல,
உன் நினைவுகளை தன்னுள்
புதைக்கும் சவக்குழி.

No comments:

Post a Comment

பழமொழி