இன்றைய குறள்

Friday, August 3, 2012

ஒரு தீக்குச்சியின் சோக கீதம்



மரத்திலிருந்து வெட்டப்பட்டு
தனியாக பிரிக்கப்பட்டு
தேவைக்கேற்ப வடிவமைக்கப்பட்டு
உச்சியிலே மருந்து பூசப்பட்டு
பெட்டிக்குள் அடைக்கப்பட்டு
வெளியாக முற்பட்டு
குமுறளினால் விடுபட்டு
உடனடியாக எரிக்கப்பட்டு
கருகி போனேன்
நான்.
======================

சுதந்திரமாய் இருந்து
பெட்டுக்குள் அடக்கமாவோம்
வெகு நாட்களாய் அடங்கி இருந்து
வெடித்து சிதறி
ஒளியூட்டி
சுதந்திரம் பெற்று
மடிந்து போனாயே!!
அடங்க மறுத்தவர்களின்
இரங்கல் கூட்டம் உனக்காக.

======================

முன்னே சென்று காத்திரு
வீரத்தோடு
காவியமாகி
நாங்களும் வருகிறோம்
என்று
சூளுரையுடன்
வீர வணக்கம்

======================

எடுப்பவர்கள் எண்ணம்
போல்
சேவை செய்து,
நோக்கம் நிறைவேறிய
கர்வத்துடன்
கருகி போன
கறுப்பு காவியம்

======================

இருள் அரக்கனை
எதிர்த்துப்போராடும்
கோபமாகி, சிவந்து
காவியமான
வீர போராளியின்
இறுதி வண்ணம்
கறுப்பு

======================

மருந்துண்டு உயிர்
பிழைப்பவர்கள்
"மருந்து" உள்ள
உன்னை
கொன்றார்கள்

======================

3 comments:

  1. அனைத்தும் நல்ல வரிகள்... குறிப்பாக முதலும், கடைசியும்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. மிகவும் அருமை. உன்னால் மட்டும் எப்படி மச்சி இப்படி?

    ReplyDelete

பழமொழி