இன்றைய குறள்

Monday, February 27, 2012

நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம், மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம்

நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம், மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம் - இரா.சம்மந்தனின்

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் பொது மண்டபத்தில் நடைபெற்ற” “ஜனநாயக அடிப்படையில் அரசியல்சமுக உரிமைகளை வென்றெடுப்பதற்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்று காலை 9மணிதொடக்கம் 4.30மணிவரை நடைபெற்றது

இதில் பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனின் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த உரையின் முளுமையான வடிவம்.





இறமை என்பது மக்களுக்குரியது அது மக்களிடமே இருக்கவேண்டும் இறைமை என்ற சொல் 3அம்சங்களை கொண்டிருக்கின்றது. முதலாவது ஆட்சி அதிகாரங்கள்(சட்டத்தை ஆக்கும் அதிகாரம் நிர்வாக அதிகாரம் நீதி தொடர்பான அதிகாரம்) 2ம் அம்சம் அடிப்படை உரிமைகள் மனிதவுரிமைகள் 3ம் அம்சம் வாக்குரிமை ஜனநாயகத்திற்கு உயர் கொடுப்பது வாக்குரிமை அப்போது ஒரு நாட்டில் இறைமையுள்ள மக்களாக தமிழர்களும் தமிழ்பேசும் மக்களும் வாழவேண்டுமானால் இறைமை என்ற சொல்லில் அடக்கப்படுகின்ற மூன்று அம்சங்களும் ஏதோவொரு வகையில் கிடைக்கப் பெற்றிருக்கவேண்டும்.

இவ்வற்றில் ஏதாவது ஒன்றோ முளுவதுமாகவோ அல்லது அர்த்தமான வகையில் கொடுக்கப்படாவிட்டால் அவர்களது இறைமை மறுக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் எல்லாம் நடந்து வருகின்றது. 1956ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் தொடக்கம் எமது மக்கள் தமது ஜனநாயக தேர்தல்களை பயன்படுத்த இந்த நாட்டில் என்னவகையான தேர்தல் இடம்பெறவேண்டும் என கூறிவருகின்றனர். அதாவது இந்தநாட்டிலுள்ள ஒற்றையாட்சி முறை நாம் சமபிரஜைகளாக வாழமுடியாது. எனவே அது நீக்கப்பட்டு சமஸ்டி முறை உருவாக்கப்பட்டு அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் அல்லது ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அரசியல் சாசன ரீதியாக ஓழுங்குகள் செய்யப்படவேண்டும்.

அதன் மூலம் தமது இறைமையை பயன்படுத்த விரும்புகின்றோம் என சொல்லிக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்தேர்தல்மாகாணசபைத்தேர்தல் உள்ளுராட்சித்தேர்தல் என அதை;துத்தேர்தல்களிலும் தேர்தல்களில் சொல்லியிருக்கின்றார்கள். அது அவர்களது ஜனநாயக உரிமை. அதை மதிக்கவேண்டியது அரசின் உரிமை அதில் தவறுமாயின் அந்த மக்களின் இறைமை மறுக்கப்படுகின்றது. மற்றவர்களுக்குள்ள உரிமை பெரும்பான்மையினருக்குள்ள உரிமை அவர்களுக்கு மறுக்கப்படுகின்றது.

பெரும்பான்மை இனம் தாம் பெரும்பான்மையாக உள்ளகாரணத்திற்காக சிறுபான்மை இனத்தை ஆட்சி செய்ய முடியாது. அவ்வாறு புர்pந்தால் அந்த சிறுபான்மையினருக்கு மாறாக அந்த சிறுபான்மை இனத்தின் இறைமை மறுக்கப்படுகின்றது. இதுவே இங்கு நடந்தது. அதனாலேயே இங்கு போராட்டங்களும் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டன. ஒரு நாட்டில் வௌ;வேறு இனங்கள் மக்கள் வாழ்வதாக இருந்தால் அவ்வகையான மக்களுக்கு இயைவாக இருக்கவேண்டும்.

இந்தியாவில் பலமொழிபேசும் மக்கள் வாழ்கிறார்கள். தமிழ் உட்பட பல இனம்சார் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு கணிசமானளவு தமது பிரதேசங்களில் அந்தந்த மொழி பேசும் மக்கள் கலாச்சாரம் பாரம்பரியங்கள் கொண்ட மக்கள் தமது பிரதேசங்களை ஆள்கின்றனர். ஆனால் ஆனால் அது முளுமையான சமஸ்டி அல்ல. ஆனால் அதிகாரம் பகிரப்பட்டிருக்கின்றது சட்த்தை ஆக்கும் அதிகாரம் மனிதவுரிமைகள் தொடர்பான அதிகாரம் தமது ஜனநாயக உரிமையூடாக ஆட்சி ஒழுங்குகளை தாங்களே பராமரித்து கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இது எமக்கு மறுக்கப்பட்டிருக்கின்றது. இதுவே முக்கிய பிரச்சினை

நாம் ஜனநாயக ரீதியாக 30வருடம் போராடினோம் தந்தை செல்வா அவர்கள் நாட்டை ஆட்சி செய்த தலைவர்களுடன் பல ஒப்பந்தங்களை செய்து கொண்டார். அவை நிறைவேற்றப்பட்டிருந்தால் நாட்டில் யுத்தம் தோன்றியிருக்காது. பண்டா செல்வா ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதன் மூலம் நாம் அரச அதிகாரி அலுவலகத்திற்கு முன்னால் நாம் போராட்டம் செய்து ஸ்தம்பிக்கச் செய்தோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்ற தந்தை செல்வா தள்ளப்பட்டார் ஏறத்தாள 30வருடம் வேறு வழியில் இந்தப் பிரச்சினையை தீர்க்க போராடினார். 45ம் ஆண்டு பா.உ தேர்தலில் இந்த நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வழவேண்டும் எனக் கேட்டிருந்தார். நாம் 77ம் ஆண்டு பாராளுமன்னத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அண்ணன் அமிர்தலிங்கம் இந்திரா காந்தி கூறிய கருத்தின் அடிப்படையில் அதாவது தனிநாடு கோரினால் நாம் உதவ முடியாது ஆனால் நியாயமான சுயாட்சி முறைக்கு வந்தால் உதவமுடியும் என்றார். அதன் பின்னர் பா.வெளியேயும் உள்ளேயும் தனிநாட்டுக்கு நிகராக நாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை நீங்கள் தரத்தயாராக இருந்தால் நாம உங்களுடன் பேச தயார் என் அதற்காக நாம் உழைத்திருக்கின்றோம்.

அவ்விதமான தீர்வொன்று ஏற்படாமையினால்தான் யுத்தம் வெடித்தது காரணம் இல்லாமல் ஒரு யுத்தம் ஆரம்பிக்கவில்லை காரணமில்லாமல் யுத்தம் ஆரம்பிக்கவில்லை அந்தக்காலத்திலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தோம் இந்திரா காந்தியை சந்தித்தோம். பல முயற்சிகளை எடுத்திருந்தோம் இந்தி.இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட 13வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டது ஆதை நாம் ஒருபோதும் ஏற்கவில்லை 87ம் ஆண்டு ஜப்பசி மாதம் அமர் சிவசிதம்பரம் நான் கடிதமொன்றை எமது மக்களின் அபிலாசைகளிற்கொரு தீர்வாக ஏடுக்கமுடியாதென தெரிவித்திருந்தோம்.

ஆனால் இன்று யுத்த பின்னர் நாம் போராட்டத்தின் அடுத்த நிலைப்பாட்டிற்கு நாம் சென்றிருக்கின்றோம். யுத்தம் நடந்ததற்று அடிப்படையான காரணம் தமிழர்களின் நியாயமான உரிமைகள் மறுக்கப்பட்டது ஜனநாயக உரிமைகள் மனிதவுரிமைகள் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டது. இவற்றின் காரணமாக இன்று இலங் அரசு சர்வதேச ரீதியாக தான் செய்த ஒப்பந்தங்களை தான் கடைப்பிடிக்கவில்லை அந்த ஒப்பந்தங்களை தானே மீறியிருக்கின்றோம். என விளக்கம் சொல்லவேண்டிய நிலைக்கு வந்திருக்கின்றது

அது சர்வNதுசத்தின் கடமை ஒரு நாடு ஜ.நா ஒப்பந்தங்களை ஏற்று அதை கைச்சாத்திட்டு அதை அமுல்ப்படுத்த சம்மதிக்குமாயின் அவ்வாறு செயற்படவேண்டியது அந்த நாட்டின் கடமை அதிலிருந்து தவறும் பட்சத்தில் அது தொடபாக விசாரிக்க ஜ.நாவிற்கும் சர்வதேசத்திற்கு உரிமையுள்ளது. அதனடிப்படையில்தான் பல கேள்விகள் எழுப்பப்ட்டுள்ளன. இலங்கையில் தமிழ் மக்களின் மனிதவுரிமைகள் மறுக்கப்பட்டதாக சாட்சிகள் இருப்பதாக திடமாக தெரிவிக்கப்படுகின்றது இதனடிப்படையில் தமிழர் உரிமைகள் மீறப்ட்டதாக ஜ.நா நிபுணர்குழு விசாரணையின் பின்னர் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசினாலும் ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அறிக்கையில் கூட தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் பொறுப்புக்கூற வேண்டிய இடத்தில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை குறைபாடுள்ளது. முடி மறைக்க நினைக்கின்றார்கள்

ஒரு அரசியல் தீர்வு இந்த நாட்டில் ஏற்படவேண்டும் ஜனநாயக உரிமைகள் மனிதவுர்pமைகள் மதிக்கப்படவேண்டும். நாம் தமிழ் மக்கள் சார்பாக சர்வதேசத்திடம் கேட்பது இந்த நாட்டில் நாம் வாழ்ந்துள்ளோம் மற்றவர்களைப்போல் அவர்களைவிடவும் நீண்டகாலமாக நாம் வாழ்ந்துள்ளோம் நாம் தனித்துவமான மக்கள் எங்களின் சொந்த பாரம்பரியம் கலாச்சாரம் மொழி சரித்திரரீதியாக வாழ்ந்த வடகிழக்கு மண் அனைத்துமேயுள்ளது. எனவே தொடர்ந்து சம உரிமையுடன் வாழ உரிமை உண்டு

உரிமைகளை கேட்டதற்காக பாரிய அழிவுகளை சந்தித்திருக்கின்றோம். இந்த பிரச்சினை தீர்க்கப்படாவிட்டாலு; மீண்டும் இனப்படுகொலை நடைபெறும் வன்முறை நடைபெறும் அதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது அதிலிருந்து எம்மை பாதுகாக்கவேண்டியது உங்கள் கடமை இதையே பகிரங்கமாக சர்வதேசத்திடம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம் ஒரு பிரச்சினையை தீர்ப்பதற்கு இலங்கை அரசு கையாண்ட வழியை உதாரணமாக கொண்டு இன்னுமொரு நாடு இந்த முறையை கையாள்வதற்கு சர்வதேசம் இடமளிக்க கூடாது. பேச்சுவார்தை மூலம் நியாயமான ஓழுங்குகள் மூலம் பிரச்சினை தீர்த்திருக்க முடியும் யுத்ததின் மூலம் தீர்க்க நினைத்தது தவறு என்பதை சர்வதேசம் புரியவைக்கவேண்டும் சர்வதேசத்தின் பணிகளுக்கு எமது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் அதன் மூலம் எமது கலாச்சாரம் சமுக ஜனநாய விருப்புக்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்படவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

நாம் இலங்கை அரசிற்குச் சொல்லும் விடயம் இந்த உண்மை எல்லாவற்றையும் நோக்கி கடந்த தைமாதம் தொடக்கம் பேசி வருகின்றோம் நாம் நிதானமாகவும் விசுவாசமாகவும் நடந்துள்ளோம் ஒருமித்த நாட்டிற்குள் எமது இறைமையின் அடிப்படையில் நியாயமான நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வொன்றிற்காக பேசிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் நியாயமாக விசுவாசமாக நடக்கவில்லை ஆனால் எமது மக்களுக்கு ஓரு தீர்;வு தேவை அதனால் பேச்சில் ஈடுபட்டோம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது அது எமது தவறல்ல உங்கள் தவறு ஒப்பந்தங்களை மீறும் வகையில் நிறுத்தியிருக்கின்றீர்கள் இதை சர்வதேசம் புரிந்திருக்கின்றது. எமக்கு நியாயமான தீர்வை இல அரசு பேச்சில் ஏற்படுத்தாவிட்டால் இனிமேல் சர்வதேசம் எந்தெந்த வகையில் தீர்க்கமுடியுமோ அந்தந்த வகையில் தீர்த்து வைக்கவேண்டும் அது அவர்களது கடமை.

நாம் எமது மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம். மக்கள் விரும்பும் தீர்வொன்றினை கட்டாயம் பெற்றுக் கொடுப்போம்.

No comments:

Post a Comment

பழமொழி