இது எனக்கு அனுப்பிய இசைக்கு பதித்த வரிகள்.
நினைவே ஓ நினைவே
எந்தன் நெஞ்சில் அவள் நினைவே
கனவே ஓ கனவே
நித்தம் கனவில் அவள் முகமே
நிழலே ஓ நிழலே
அருகில் இல்லை அவள் நிழலே
மலரே ஓ மலரே
உன்னை சூட இல்லை மனமே
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய்
தணலில் வீழ்ந்த புழுவாய் தவிக்கிறேன்
தண்ணீர் இல்லா மீனாய் துடிக்கிறேன்
பூமாலை சேராமல் தனிமையில் வாடுகிறேன்
சூரியனை கண்ட பனிதுளியாய் மறைகிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]
உன்னை மறக்க நினைத்து தோற்றேன்
உலகில் வாழ நான் மறுக்கிறேன்
என் வாழ்க்கையை நாளும் வெறுக்கிறேன்
அதில் சுற்றத்தை முற்றிலும் மறக்கிறேன்
இந்த உலகத்தை நானும் துறக்கிறேன்
நீ வந்த நேரம் என் இருளில் கண்டேன் விடியலை
நீ மறைந்த நேரம் என் விடியலில் இன்னும் இருளாய் [நினைவே ஓ]
No comments:
Post a Comment