பள்ளியிருக்கும் திசையில் விரைந்தேன்,
அன்றும் என்னை விட வளர்ச்சியாக
என் முன்னால் அவன்!
வேகமாக துரத்தினேன், என்னை விட
விரைவாக அவன், என் முன்னால்.
மாலையும் இதே.
மதியம் கவனித்தால் பெட்டிப்பாம்பாய்
என் காலடியில் சிறுவனாய்.
மரத்தடியில் சொல்லிக்கொள்ளாமல் மறைந்தான்.
இரவு விளக்குவீதிகளில் நாலைப்புறமும் திரிந்தான்.
தடுக்கி விழுந்த பொழுது அவன் மீதே விழுந்தேன்.
முழங்காலில் பட்ட காயத்தால் தாங்கி நடக்கிறேன்
அவனும் அப்படியே!!!!
அவனே என் நிழல்....

No comments:
Post a Comment