இன்றைய குறள்

Wednesday, December 28, 2011

ஏன் தமிழ் பேச வேண்டும் [காணொளி இணைப்பு]

நாம் தமிழர் என்பதற்கான ஒரே அடையாளம் நம் தாய் மொழி. மீண்டும் மீண்டும் இதை சொல்வதற்கும் சில காணொளிகள் தேடி இணைப்பதற்கு காரணம், நம்மை சுற்றி நடப்பவை தான் காரணம்.

2 தெலுங்கர்கள் , 2 கண்னடர்கள், 2 மலையாளிகள், 2 மலாய் இணைத்தவர், 2 சீனர்கள் பேசும் பொழுது அவர்களின் தாய் மொழியில் தான் பேசுகின்றார்கள். அது என்னமோ தெரியவில்லை! தமிழர்களுக்கு மட்டும் தான் தாய் மொழியில் பேசு என்றால், கோபம் வருகிறது. இரண்டு பேருக்கும் ஒரே தாய் மொழி இருக்கும் பொழுது எதற்கு வேறு மொழி?? கொஞ்சம் உங்களுக்குள்ளே கேளுங்கள் இந்த கேள்வியை.

நம்முடைய அடையாளம் நம் மொழி மட்டும் தான். இது மட்டும் தான் நமது சிந்தனையில் இருக்க வேண்டும்.

சீனர்கள் அவர்களுடைய புத்தாண்டை மதம் பார்க்காமல் அனைவரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் நம்முடைய தமிழகத்தில் தமிழ் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை, எத்தனை பேர் கொண்டாடுகிறோம் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

நம்மை நாம் தொலைத்து கொண்டுவருகிறோம். இனியும் நாம் விழிக்காவிட்டால், ஐநாவின் கருத்துகணிப்பு படி இன்னமும் 28 வருடங்களில் இந்த உலகத்தில் நிச்சயம் தமிழ் மொழி பேசும் மக்கள் இருக்கமாட்டோம்.


No comments:

Post a Comment

பழமொழி