இன்றைய குறள்

Sunday, November 20, 2011

தோழர் ராஜேஷின் காதல் வாழ்க்கை


அந்த இனம்புரியா வயதில்
என் அரும்பு மீசை எட்டி பார்க்க துடிக்க,
என் இதயவானில் ஒரு மின்னல் கீற்று!
உற்றுப்பார்த்தேன்.
என்னுள் ஒரு சங்கீத ஒலி!
அந்த ரம்யமான இசை எனக்குள்
சிறகுகள் முளைத்தது போல்
ஒரு எண்ணம்.
கால்கள் பூமியை மறந்தது போல்
ஒரு எண்ணம்
என்னை எங்கோ பறக்க செய்த்தது.
தொலைத்த பாதையில் திசை
காட்டும் ஒளியாய் நீ நின்றாய்.

அந்த கண்களின் ஒளியில் நான் என்னை உணர்ந்தேன்!
அன்பால் என் அன்னையையும், பண்பால் என் தந்தையையும்
ஞாபகப்படுத்தியது.

சரியா தவறா என்று தெரியவில்லை? ஆனால்
அது எனக்கு பிடித்துப்போனது.

எனக்கு மிகவும் பிடித்த என் தாய் மொழியின்
முதல் எழுத்து "அ" உன் பெயரின்
முதல் எழுத்து.
அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
என் அன்னையின் அன்புக்கு பிறகு
நீ தான் என்ற ஒரு உணர்வு இன்றும்
என் ஆழ்மனதில் இருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும்,
நாடுகள் பல சென்றாலும்,
பல்சுவை பல சுவைத்தாலும்,
அன்பினாலான
உன் ஒரு பிடி சோற்றிற்கு ஈடாகவில்லை.
பல உண்மைகளை உன்னிடம் மறைத்தாலும்
என்னென்றும் எனக்காக நீ என்பதை மட்டும்
உறக்கக்கூறுகிறது உள்மனது.

என்னை நெஞ்சில் சுமந்து
என் உயிரை உன்னுள் சுமந்த
நீயும் என் தாய் தான்.

4 comments:

  1. ithu yen valvil kedaitha mika uyarthan Parisake karuhtukiren

    ReplyDelete
  2. மிக்க நன்றி தோழர் ராஜேஷ் அவர்களே..

    ReplyDelete
  3. ஐயா யார் அந்த தோழர் ராஜேஷ்

    ReplyDelete
  4. இங்கே மலேசியாவில் அறிமுகமான ஒரு நண்பர். நானும் அவரும் மட்டைபந்து மற்றும் கைப்பந்து ஒன்றாக விளையாடுவோம்... ஏன் தோழரே??

    ReplyDelete

பழமொழி