இன்றைய குறள்

Monday, July 21, 2014

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி

லார்ட்ஸ் ஆடுகளத்தில் விளையாடி வெற்றி பெறுவது கனவாக இருந்து வந்த இந்திய கிரிகெட் அணி ஒரு வழியாக இன்று 21-Jul-2014இல் டெஸ்ட் ஆட்டத்தை வெற்றிப்பெற்றது. 1986க்கு பிறகு இந்த வெற்றியை இந்திய அணி பெற்றுள்ளது.

சென்ற முறை வெற்றி பெற்ற பொழுது 1983 உலககோப்பை வெற்றி பெற்று 3 ஆண்டுகள் கழித்து லார்ட்ஸ் ஆடுகளத்தில் வெற்றி பெற்றது. அதே போல 2011இல் நடைபெற்ற உலகக்கோப்பையை வென்ற பிறகு 3 ஆண்டுகள் கழித்து 2014இல் இந்த வெற்றியை பெற்றத்து குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரண்டாவது போட்டி இன்று முடிவடைந்தது. முதல் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியை வென்று 0-1 என்று தொடரில் முன்னிலை வகிக்கிறது இந்திய கிரிகெட் அணி. முதல்  இன்னிங்க்ஸில் ஒரு விக்கட் கூட எடுக்காமல், இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி 7 இங்கிலாந்து வீரர்களை ஆட்டமிழக்க வைத்தார் இஷாந்த் ஷர்மா. ஒரு ஆசிய வீரர், ஆசிய நாடுகளை தவிர்த்து 4வது இன்னிங்க்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் இசாந்த் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த போட்டி ஜூலை 27 அன்று நடைபெறவிருக்கிறது.

No comments:

Post a Comment

பழமொழி

மின்னஞ்சலில் தொடர.