அங்குர்வார்ட், சியாம்ரீப் கம்போடியா என்றவுடன் ஏதோ வேற்று நாடு என்று ஒதுக்கவேண்டாம். ஏன்னென்றால், நம்முடைய வரலாற்றில் மேலோட்டமாக தான் கற்பிக்கப்பட்டுள்ளது. சென்று பார்த்தால் கிட்டத்தட்ட 600 வருட (600 – 1200) தமிழரின் வரலாறு அங்கு இருக்கிறது. தமிழர்களுக்கும் கம்போடியாவுக்கும் நிறைய தொடர்புண்டு. மேலும் நிறைய வியப்பும் உண்டு.
சைவ மற்றும் வைணவ மதம் இருந்த காலத்தில் பல்லவர்கள் கட்டிய மாபெரும் கோவில் தான் இன்று அங்குர்வார்ட் என்றழைக்கப்படுகிறது. பகுத்தறிவாளர்கள் கோவில் என்று ஒதுக்காமல் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழன் கட்டுமான பணியில் சிறந்து விளங்கினான் என்ற கண்ணோட்டத்தில் வாசிக்க வேண்டுகிறேன். நம் தமிழகத்தில் இருக்கும் மாமல்லபுரம் கற்சிலைகள், கடற்கரை கோவிலை, தஞ்சை மற்றும் மதுரை கோவில்களை எப்படி வியந்து பெருமை கொள்கிறமோ அதே அளவிற்கு அங்குர்வார்டையும் நாம் பெருமை கொள்ளவேண்டும். அதை இப்பொழுது யார் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்று பார்த்தால் நமக்கு நிச்சயம கோபமும் வருத்தமும் நிச்சயம் வரும். சியாம்ரிப் ஊரில் நிறைய இடங்களில் ஐந்து தலை பாம்பின் வடிவங்களை காணலாம். மேலும் நான்கு தலையுடைய பிரம்மனின் தலை மற்றும் சில இடங்களில் விநாயகர், கருடன் மற்றும் நரசிம்மன் உருவத்தையும் காணலாம்.
மேலும் ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் கிமர் எழுத்துக்களை நாம் கண்ட பொழுது அதில் தாய்தமிழ் எழுத்துக்கள் (பு, கு, சூ, து ) இருந்தன.
பசுமை நிறைந்த மரங்கள் மிகவும் அடர்தியாக இருக்கும் காடு. இத்தனை வளர்ச்சியடைந்த பொழுதே இப்படி பசுமையாக இருக்கிதே, அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்றெண்ணினால் நிச்சயம் உடல் சிலிர்க்கும். அக்காட்டினுள்ளே போடப்பட்ட தார் சாலை வழியாக உள்ளே சென்றால் பிரமாண்டமான அங்குர்வார்ட் கோவில் காட்சியளிக்கும். அதை சுற்றி கிட்டத்தட்ட ஏரி போல் இருக்கும் நீர்நிலை. மற்றவர்கள் பார்வைக்கு அது ஓர் நீர்நிலையாக தெரியும். ஆனால் அது ஏரியல்ல, அகழி என்று தமிழர்களாகிய நமக்கு தெள்ளத்தெளிவாக விளங்கும்.
பிரம்மாண்டமான அகழி அது. அங்குர்வார்ட் கோவிலை கிட்டத்தட்ட 50000 பேர் சேர்ந்து வெறும் 32 ஆண்டுகளில் கட்டிமுடித்துள்ளார்கள். இதே மாதிரி ஐரோப்பாவில் ஒன்றை கட்டியிருந்தால் நிச்சயம் 100 ஆண்டுகளுக்கு மேலாகும் என்று ஆராய்ச்சி செய்யும் ஜெர்மானியர் தெரிவித்தார்.
கோவில் முழுவதும் சைவ மற்றும் வைணவ மதத்தை பற்றிய சுவடுகள் எல்லா இடங்களிலும் காணலாம். ஆனால் அது உடைக்கப்பட்டு காணப்படும் அல்லது நீக்கப்பட்டிருககும். அந்த இடத்தில் பௌத்த மதத்தை பறைசாற்றும் புத்த சிலைகள் நிறுவப்பட்டிருப்பதை காணமுடியும்.
அகழியை கடக்க போடப்பட்டிருக்கும் படிகளில் ஏறும் பொழுது இரண்டு பக்கங்களிலும் ஐந்து தலையுடைய பாம்பு சிலையை காணலாம். அவற்றின் நீண்ட உடல் அகழி முழுவதையும் கடந்து வாசலையடையும்.
மீண்டும் வாசல் துவங்கி முதன்மை வாசலடைய சுமார் 800 மீட்டர் தூரம் பாம்பின் உடல் அமைப்பு இருபுறமும் அமைக்கப்பட்டிருக்கும். நடந்து செல்லும் பொழுது இரண்டு பக்கங்களிலும் இரண்டு மண்டபங்களை காணலாம். பிறகு ஓர் பெரிய குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
காலை கதிரவன் உதிக்கும் பொழுது கதிரவனின் செந்நிற கதிர்களோடு கோவிலைக்காண மிகமிக அழகாக இருக்கும். அப்பொழுது கோட்டையின் நிழல் குளத்தில் விழும் அழகு காட்சி ஆகா பிரமாதமாக இருக்கும்.
கோவிலின் உட்புறத்தில் இருந்து கோபுரங்களை காண்பது கணங்களை கவரும் வன்னம் இருக்கும். அதிலிருந்த படிகளை பார்க்கும் பொழுது எப்படி இதில் ஏறி இறங்கி இருப்பார்கள் என்று ஒரு கணம் நம் எண்ணத்தில் உதிக்காமல் இல்லை. புதிதாக அமைக்கப்பட்ட பலகை படிகள் இருந்தது. அதில் ஏறி இறங்கும் பொழுது நமக்கு அச்சமாகவும் சற்றே கண்டினமாகவும் இருந்தது.
கோவிலின் வெளிப்புற சுவர் முழுவதிலும் அதாவது நான்கு பக்கங்களிலும் இராமாயனம், மகாபாரதம், நரகத்தில் விதிக்கும் தண்டனைகள் மற்றும் திருப்பாற்கடல் கடைதல் ஆகிய நிகழ்வுகளை மிகமிக நேர்தியாகவும், அழகாகவும் பொறித்துள்ளனர்.
அவை அனைத்தும் காண்பதற்கு மிக மிக அழகாகவும், அற்புதமாகவும், வியக்கவைக்கும் வகையில் இருக்கும். இதை போன்று சுவற்றில் செத்துக்கின்றவர்கள் தமிழகத்தில் மட்டும் தான் இருந்தனர். அதற்கு உதாரணம் நம்முடைய மகாபலிபுரம். இந்தியாவில் மற்ற பகுதியில் ஓவியங்கள் பார்க்கலாம், சிலைகள் பார்க்கலாம். ஆனால் சுவற்றில் செத்துக்கி இருப்பதை பெருமைமிகு தமிழகத்தில் மட்டுமே காணமுடியும்.
திருப்பாற்கடல் கடைதலை பார்த்த பொழுது தான் எனக்கு புரிந்தது ஊரில் நிறைய இடங்களில் ஏன் ஐந்து தலை பாம்புகளின் சிலைகள் இருக்கின்றன என்று!!
அது வாசுகி என்ற பாம்பு. அதை ஒரு பக்கம் தேவர்களும் மறுப்பக்கம் அசுரர்களும் இழுத்து அமிர்தம் எடுக்க திருப்பாற்கடலை கடைவார்கள் என்ற கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த அங்குர்வார்ட் தான் அந்த ஊரின், அந்நாட்டின் அடையாளம். ஆதலால், எல்லா இடங்களிலும் அப்பாம்பை நாம் காணலாம். சைவ மற்றும் வைணவ மதத்தில் கூறிய நிகழ்வுகளை பொறிக்கப்பட்டுள்ள இடத்தினுள் நீங்கள் சென்றீர்கள் என்றால் அங்குள்ள சிலைகளை பார்க்கும் பொழுது அதிர்ந்து போவீர்கள்.
ஏன்னெனில் அங்குள்ள சிலைகள் அத்தனையும் புத்தரின் சிலைகள். சிவலிங்கங்கள், விஷ்ணு மற்றும் துர்க்கை விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதைப்பார்க்கும் பொழுது நம்மனம் நிச்சயம் வேதனைப்படும். புத்தர் இப்பொழுது இருந்தாலும் இதை பார்த்து வேதனைப்படுவார். அந்த கோவில் கட்டிய காலத்தை கிமர் நாகரீகம் என்று வரலாற்றில் திருத்திவிட்டார்கள். இனிமேல் நாமும் கேட்கமுடியாது.
உட்சுவர்களில் நிறைய இடங்களில் அப்சரஸ் எனும் தேவலோக கண்ணிகள் நடனமாடுவதை பல இடங்களில் பொறித்துள்ளார்கள். தேவலோக கண்ணிகள் நம்முடைய கதைகளில் வரும் இரம்பை, மேனகை, ஊர்வசி, மற்றும் திலோத்தமை தான் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இருக்காது என்று நம்புகிறேன். இன்றும் கம்போடியாவில் இருக்கும் நிறைய உணவு விடுதிகளில் கண்ணைக்கவரும் அப்சரஸ் கண்ணிகளின் நடனம் இரவு உணவோடு நாம் காணலாம்.
இன்றும் நடந்து வரும் அந்த நடனம் அவர்களின் கலாச்சார நடனமாக திகழ்கிறது. ஆனால், அது தமிழன் கற்பித்த நடனமே அன்றி வேறென்ன சொல்வதற்கு இருக்கிறது. இப்படி நாம் பயிற்றுவித்த பல சங்கதிகள் இன்றும் அங்கு கலாச்சாரமாக செய்து வருகின்றார்கள்.
இன்னும் சில இடங்களில் முனிவர்கள் தியானம் செய்வது போன்றும் வடிக்கப்பட்டுள்ளது.
இத மட்டுமல்ல புது நபர்களை பார்க்கும் பொழுது நாம் மறந்த, (எல்லோரையும் சொல்லவில்லை) செய்ய மறுக்கும் பழக்கமான கும்பிடுவதை இன்னமும் பின்பற்றுகிறார்கள். புதியவர்கள் என்றால் தமிழர்கள் மட்டுமல்ல மேற்கத்தைய மனிதர்களை பார்த்தாலும் கையெடுத்து அழகாக கும்பிடுகிறார்கள். நன்றி (அங்குன்) சொல்லும் பொழுதும் அழகாக செய்கிறார்கள். காண்பதற்கு அழகாக இருக்கிறது ஆனால் மனதினோரமாக வருத்தம் இறுக்கமாக அமர்ந்துகொள்கிறது. அடுத்தவர்கள் எப்படி இருக்கிறார்கள் சொல்லும் முன் நாம் பின்பற்றுகிறோமா என்று எண்ணிப்பார்த்தல் நல்லது.
அடுத்து அங்கிருந்து சுமார் 10நிமிட பிரயாணத்திற்கு பிறகு ஒரு அழகான கோபுர நுழைவாயில். அங்கு செல்லும் முன் சாலையின் இருபக்கங்களிளும் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பிரமாண்ட சிலைகளின் கரங்களில் வாசுகியை பிடித்தவன்னம் வீற்றிருப்பார்கள். சற்றே அருகில் அருமையான கோவவல் நான்முகன் அதாவது பிரம்மனுக்கு எழுப்ப்பட்டுள்ளது கிட்டத்தட்ட எட்டு கோபுரங்கள் நான்கு முகங்களோடு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மறக்க வேண்டாம் இவை அனைத்தும் கிபி600 முதல் 1200 ஆண்டுகளில் கட்டிமுடிக்கப்பட்டது. இக்கோவில் பிகளை கடந்து உள்ளே நுழையும் முன் புத்தர் வீற்றிருப்பார். அவரை கடக்கமுயலும் பொழுது பின்பகுதியில் மேல்பாகம் உடைந்த சிவலிங்கத்தை காணலாம். கோவிலின் உள்ளே சேதப்படுத்தப்பட்ட சிவலிங்கங்கள் ஆங்கங்கே இருப்பதை நம்மால் காணமுடியும்.
நாங்கள் சற்று கலைத்துவிட்டோம். 6 நாட்கள் பிடிக்கும் அவ்விடங்களை சுற்றிப்பார்க்க, ஆனால் நாங்களோ மூன்றே நாட்களில் முடிக்கநினைத்தது எத்தனை தவறு என்றே எங்களை நாங்களே திட்டித்தீர்துக்கொண்டோம். கலைத்தாலும் எங்கும் ஓய்வெடுக்கவில்லை. பயணத்தை தொடந்தோம்.
அடுத்து அழகான ஒரு மாளிகை போன்ற அமைப்பு. இதற்கு செல்லும் முன் இருபக்கங்களிலும் நீர்நிலை.
அதனோரமாக இரண்டு சிறுவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அதை பார்த்துக்கொண்டே கடந்தோம். மாளிகையின் மேல் தட்டு சுத்தமாக சேதமடைந்திருந்தது. நாங்கள் இரண்டு தளங்கள் ஏறிச்சென்றோம். அங்கும் எங்களுக்கு வியப்பே காத்திருந்தது. அம்மாளிகையின் பின்னால் சுமார் 15 நபர்கள் உட்காரும் இறுக்கை போல அமைக்கப்பட்டள்ளது. அந்த காலத்தில் மந்திரிகளோடு ஆலோசனை செய்யும் இடமாக இருந்திருக்கலாம். அஙகிருந்து வலப்புறம் நகர்ந்து சென்றால் பெரிய நீச்சல் குளங்கள் போல் இரண்டு இருக்கிறது.
அங்கிருந்து 20 நிமிட பயண தூரத்தில் மேலும் பிரம்மாண்டமான கோவில் சிதைந்து காணப்படுகிறது. அதை சீரமைக்க இந்திய மற்றும் கம்போடிய ஆராய்ச்சியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அங்கிருக்கும் அனைத்து கோவில்களிலும் மரங்கள் நீண்டு வளர்ந்து அவைகளின் பிரம்மாண்ட வேர்களை கோவில்களின் மீது படரவைக்கிறது. காண்பதற்கு நிச்சயம் ஆச்சிரியமாக இருக்கும். அக்கோவின் மற்றொரு நுழைவாயிலை அடையும் பொழுது நாங்கள் கண்ட காட்சி தமிழகத்திற்கு கொண்டுசென்றது. அங்கே அந்த ஊர் பெண் பிள்ளைகள் பான்டி விளையாடி கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் அதை அப்படியே நின்று பார்த்துவிட்டு, அந்த காலத்து மதிலை பார்த்துக்கொண்டே திரும்பினோம்.
இந்த கட்டுரையை முடிக்கும் முன் எந்தெந்த மன்னர்கள் எந்தெந்த காலத்தில் ஆட்சி புரிந்தார்கள், அவர்களின் பெயர்கள் அவர்கள் என்னென்ன கோவில் மற்றும் மண்டபங்களை கட்டினார்கள் என்று கீழே இருக்கும் படம் சொல்லும்.
குறிப்பு: இங்கு பதிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் என் நண்பரிடம் இருந்து கடன்வாங்கி சென்ற புகைப்பட கருவியில் பதிவு செய்தது.
Arumayana ,virivana vilakkam koduthurukireegal. unarnthathai nandrai solli irukirregal.. Vazhthukkal!
ReplyDeletenandri bala
DeleteNice to see some interest on Angkor wat. I visited here a couple of years ago and blogged in detail at http://nslaxx.blogspot.com
ReplyDeleteThere are more sights around Siem Reap where Hindu scriptures are prodominent.
உனக்கு கிடைத்த அருமையான வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி இருக்கிறாய் .. தமிழனின் பெருமைக்கு இதுவும் ஒரு சான்று..
ReplyDeletenandri machi. nichchayamaaga
DeleteSuper Thaliva,
ReplyDeletenandri
DeleteArumaiyaana katturai. thaangal alitha vilakkangal ovondrum ennai antha idathirke azhaithu sendrathu pol irunthathu . Nandri . Enathu kangalum kambodiavil irukkum kalaikalai kaana thudikkirathu .
ReplyDeletemikka nandri. sendru vaarungal thiruvaalar sureshkumar avargale.
Deleteanna ungalin katturai neengal solvathu pol arumai.
ReplyDeletetamilan paarthu perumaipada vendiya idangalil ondru
.
நன்றி...
Deleteநன்றி சகோதரி...
ReplyDeleteஅருமையான கட்டுரை... இன்னும் நிறைய பயண கட்டுரைகள் எழுதவும் நண்பரே. அங்கோர் வாட் குறித்த கட்டாயம் காண வேண்டிய ஒரு அருமையான ஆவணப்படம் -- http://www.youtube.com/watch?v=A8d_MsLNz4M
ReplyDeleteநன்றி...பகிர்விற்கும் நன்றி தோழரே...
Deleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி...
Deletearumai migga nanri
ReplyDeleteகேள்விபட்டு இருக்கிறேன் ,,இன்று முழு தகவலையும் அறிந்தேன் ....
ReplyDelete